-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

ஐஸ் தண்ணீர் உடலை எப்படி பாதிக்கிறது என்று தெரியுமா?

கோடைக்காலம் ஆரம்பித்து விட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத் தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும், ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்து பருகுவோம். இது வெயிலில் இருந்து
தற்காலிகமாக நல்ல நிவாரணத்தைத் தரலாம்.

ஆனால் இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால், அதனால் உடலினுள் பல பிரச்சனைகள் தான் ஏற்படும். பின் நாள்பட்ட உடல் உபாதைகளால் மிகுந்த அவஸ்தைக்குள்ளாகக்கூடும். இங்கு ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செரிமானத்தில் இடையூறு

ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். எப்படியெனில் குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாமல் இருக்கும். இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.

ஊட்டச்சத்து குறைபாடு

நம் உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்படும். இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால், உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.

தொண்டைப் புண்

குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.

இதயத் துடிப்பு குறையும்


ஐஸ் தண்ணீரைப் பருகினால், இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும் ஆய்வுகளிலும், ஐஸ் தண்ணீரைக் குடித்தால், சஞ்சாரி நரம்பு தூண்டப்படும். இந்த நரம்பானது மண்டையோட்டின் 10 ஆவது நரம்பு மற்றும் இது உடலின் தன்னாட்சி நரம்பு மண்டலம். இந்த நரம்பு தான் உடலின் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்படுத்துகிறது. குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.

திசுக்கள், இரத்த நாளங்கள் பாதிக்கப்படும்

குளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால், உடலினுள் உள்ள திசுக்களும், இரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்சனைகளை உண்டாக்கும்.

நாள்பட்ட இதய நோய்


மிகவும் குளிச்சியான நீரைப் பருகுவதால், அது நாள்பட்ட இதய நோய்களை உண்டாக்கும். குளிர்ச்சியான நீரை இரத்தத்தை உறையச் செய்து, உடலில் இரத்த ஓட்டத்தைக் கடுமையாக்கும்.

DO You Need Web Site?