
வாசிகள் இருக்கிறார்கள் என்று நம்புபவர்களின் அடிப்படை கொள்கை ஆகும்..! அந்த அடிப்படைக்கு நம்பிக்கை சேர்க்கும் வகையில் பல ஆதரங்கள் அனுதினமும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கின்றன. அவைகளில் சில மிகவும் பலமான ஆதாரமாக இருக்கும், அதிலும் உலகின் சிறந்த அறிவியல் Science தொழில்நுட்ப விஞ்ஞானிகள் Technical Scientiest எடுத்துரைக்கும் ஆதரங்கள் 'ஒரு முறைக்கு இரு முறை' யோசிக்க தூண்டுகிறது என்பது தான் நிதர்சனம். அப்படியான ஒரு ஆதாரங்களில் ஒன்று தான் ஏலியன்களின் அனுப்பிய, ஒருவேளை அனுப்பிக் கொண்டே இருக்கும் தகவல்கள்..!
உலக நாடுகளுக்கு மத்தியில் அடிக்கடி மாபெரும் சர்ச்சைகளை கிளப்பும் எட்வார்ட் ஸ்னோடன் தற்போது ஏலியன்கள்
அனுப்பிய மெஸேஜ்கள் Messages பற்றிய சர்ச்சை ஒன்றை
கிளப்பி உள்ளார்.
எட்வார்ட்
ஸ்னோடன், அமெரிக்காவின் என்எஸ்ஏ (NSA) சார்ந்த ரகசிய தகவல்களை
அவ்வப்போது வெளியிடுபவர். தேசிய பாதுகாப்பு அமைப்பு
(National Security Agency - NSA) என்பது
அமெரிக்காவின் America சமிக்கைப் புலனாய்வு அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எட்வார்ட்
ஸ்னோடன், அண்டவெளி இயற்பியல் அறிவியலாளரான நெயில் டிகிராஸ்ஸி டைசன்
உடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தினார். அந்த
சந்திப்பில் ஏலியன்கள் நமக்கு கண்டிப்பாக மெஸேஜ்கள்
அனுப்பி இருக்கும் ஆனால் அவைகளை நம்மால்
கண்டுபிடிக்கவோ,புரிந்து கொள்ளவோ முடிவதில்லை என்று
கூறியுள்ளார்.
மேலும்
ஏலியன் மெஸேஜ்கள் புரிந்து கொள்ளப்பட முடியாததற்க்கு காரணம் அந்த தகவல்கள்
எல்லாம் மறைகுறியாக்கப்பட்ட (encrypted) தகவல்கள் என்றும் ஸ்னோடன் தெரிவித்துள்ளார்.
பல விதமான அதிநவீன முயற்சிகளை
மேற்க்கொள்வதை விட, ஏலியன்கன் இரகசிய
மொழியில் எழுதப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தாலே வேற்றுகிரக வாசம் சார்ந்த விடயங்களை
அறிந்து கொள்ள முடியும் என்கிறார்
ஸ்னோடன்.
மேலும்
அந்த மெஸேஜ்களை டிகோட் (Decode) செய்வது அவ்வளவு எளிதாக
இருக்காது என்றும் கருத்து தெரிவித்து
உள்ளார். ஏனெனில் ஏலியன்கள் மிகவும்
புத்திசாலிகள் அண்டத்தில் பிற உயிரினங்கள் இருப்பதை
அறிந்து தான் அவைகள் மறைகுறியாக்கப்பட்ட
மெஸேஜ்களை பரிமாறிக் கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
அது மட்டுமின்றி ஏலியன்கள் பூமி கிரகத்தோடு தொடர்பு
கொள்ள நினைத்தாலும், அதை புரிந்து கொள்ள
முடியாத நிலையில் தான் மனித இனம்
இருக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
பூமியில்
இருப்பது போன்ற பாதுகாப்பு அம்சம்
வேற்று கிரகத்திலும் உண்டு என்பதை நம்புகிறீர்களா
என்ற டைசனின் கேள்விக்கு "இருக்கலாம்"
என்று ஸ்னோடன் பதில் கூறியுள்ளார்.
செயற்கை கோள்கள் மூலம் நாம்
அனைத்தையும் கண்காணிக்கின்றோம் என்று நினைப்பது முற்றிலும்
தவறு என்றும் ஸ்னோடன் கருத்து
தெரிவித்து உள்ளார்.
மேலும்
ஏலியன் சார்ந்த ஆய்வில் ஈடுபடும்
டாக்டர் நாதெல்லே காப்ரோவும் ஏலியன் தேடல் சார்ந்த
தன் கருத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
நம்மை
1000 வருடங்கள் பழமை வாய்ந்த நாகரீகத்தை
ஏலியன்கள் கொண்டிருந்தால் அவர்களின் தொழில்நுட்ப வளர்ச்சி அபாரமாக இருக்கும் என்று
கூறியுள்ளார் டாக்டர் நாதெல்லே காப்ரோ வாவ் சிக்னல் (Wow Signal) மட்டும் தான் இதுவரை
கிடைத்த ஏலியன் சிக்னல்களிலேயே மிகவும்
தெளிவான சிக்னல் Signal என்பது குறிப்பிடத்தக்கது.