ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மொனிட்டர் (Monitor) பிரச்னைக்கான தீர்வுகள் Solutions

அவசரமாக பணியாற்றிக் Work கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர்(Monitor) பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.
மற்ற துணை சாதனங்களில் பழுது Repair ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று
அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம்.

மவுஸ், கீ போர்டு Key Board, ஸ்பீக்கர் Speaker, ஏன் சிடி CD மற்றும் பிளாப்பி டிரைவ் Floppy Drive கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பழைய கணணியில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மொனிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது, உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது.
மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மொனிட்டரில் பிரச்னை Problem ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கணணி நன்றாக இயங்கி மொனிட்டரில் எந்த சிக்னலும்Signal வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.
1. முதலில் மொனிட்டருக்குச் செல்லும் மின்சாரம் Current இயக்கப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும். மிகவும் பழைய பல ஆண்டுகளுக்கு முந்தைய கணணி மற்றும் மொனிட்டராக இருந்தால் கணணியின் சிபியூவில் CPU இருந்தே மொனிட்டருக்கு பவர் கேபிள் Power Cable செல்லும். இது சரியாகப் பொருந்தி உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
எதற்கும் ஒரு முறை எடுத்து மீண்டும் சரியாகப் பொருத்திப் பார்ப்பதே நல்லது. தற்போதைய மொனிட்டர் எனில் அதற்கு தனியே பவர் லைன் Power Line பிளக் கார்ட் இருக்கும்.
அது சரியானபடி பவர் பிளக் சாக்கெட்டில் Socket பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்க்கவும். அந்த பிளக்கிற்குத் தனியான ஸ்விட்ச் Switch இருந்தால் அது ஆன் ON செய்யப்பட்டிருக்கிறதா என்று பார்க்கவும்.
மொனிட்டருக்கு மின்சாரம் செல்கிறது, அது ஆன் செய்யப்பட்டிருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள ஒரு சிறிய எல்.இ.டி. லைட் LED Light இருக்கும். இது மெலிதான ஆரஞ்ச் நிறத்தில் இருந்தால் மொனிட்டருக்கு மின்சாரம் செல்கிறது ஆனால் கணணியில் சிபியூவிலிருந்து சிக்னல் வரவில்லை என்று பொருள்.
2. அடுத்ததாக உங்கள் மொனிட்டரில் டிவியில் பிரைட்னஸ் Brightness மற்றும் காண்ட்ராஸ்ட் Contrast அட்ஜஸ்ட் செய்வதற்கான ஸ்விட்ச் கண்ட்ரோல் Control கொடுத்திருப்பார்ெகள். இதனை அட்ஜஸ்ட் Adjust செய்து பார்க்கவும்.
சில வேளைகளில் நாம் இல்லாத போது குழந்தைகள்Kids இந்த கண்ட்ரோல் ஸ்விட்சுகளை அழுத்தி மாற்றி வைத்திருப்பார்கள். எனவே இவற்றை அட்ஜஸ்ட் செய்தால் மொனிட்டர் சரியாகலாம்.
3. அடுத்ததாக மொனிட்டருக்கு வரும் விடியோVideo கேபிளைச் சரி செய்து பார்க்கவும். அது சரியான முறையில் பொருத்தப்பட்டிருக்கிறதா எனப் பார்த்து மீண்டும் ஒரு முறை கழட்டி மாட்டவும்.
4. இன்னொரு மொனிட்டர் கிடைத்தால் அல்லது வீட்டில் இருந்தால் அதனை இந்த சிபியூவில் மாட்டிப் பார்க்கவும். வீடியோ கேபிள் பழையதையே மாட்டவும். இப்போதும் சரியாகக் காட்சி கிடைக்கவில்லை என்றால் விடியோ Video கேபிள் சரியில்லை என்று பொருள். இந்த கேபிளை மாற்றிப் பார்க்கலாம்.
5. முடியுமென்றால் சந்தேகத்திற்குரிய மொனிட்டரைMonitor இன்னொரு கணணியில் பொருத்திப் பார்க்கவும். அப்படியும் மொனிட்டர் சரியாக இயங்கவில்லை என்றால் மொனிட்டரில் தான் கோளாறுcomplaint இருக்கிறது என்பது உறுதியாகிறது.
கணணியில் பிரச்னை இல்லை என்றும் தெரிகிறது. இந்நிலையில் உங்கள் மொனிட்டருக்குப் பதிலாகப் புதிய மொனிட்டர் வாங்கிப் பொருத்த வேண்டும் அல்லது நல்ல டெக்னீஷியனாகப் Technician பார்த்து மொனிட்டரை ரிப்பேர் செய்திட வேண்டும்.
6. இன்னும் சில வழிகளில் மொனிட்டர் இயங்காமல் காட்சி அளிக்கும். கணணி பூட் ஆகும் போதும், பின்னர் காட்சி கிடைக்கும் போதும் தெளிவான காட்சி இல்லாமல் இருக்கும். இப்படி குழப்பமான காட்சி இருந்தால் உங்களுடைய டிஸ்பிளே கார்ட் Display Card சரியில்லை என்று பொருள்.
இதனை மாற்றிப் பாருங்கள். மாற்றப்பட்ட கார்டுடன் காட்சி தெளிவாக இருந்தால் பழைய டிஸ்பிளே கார்ட் பழுதாகிவிட்டது என்று பொருள். அதனை அப்படியே தூக்கி எறிய வேண்டியதுதான்.
புதிய டிஸ்பிளே கார்டுக்கும் மொனிட்டர் சரிப்பட்டு வரவில்லை என்றால் மொனிட்டரை மாற்றுங்கள் அல்லது ரிப்பேர் Repair செய்திடுங்கள். புதியது வாங்குவது என முடிவு எடுத்துவிட்டால் செகண்ட் ஹேண்ட் மொனிட்டரை வாங்க வேண்டாம்.
அதே போல் புதிய மொனிட்டரை வாங்குகையில் அன்றைய நிலையில் அறிமுகமாகி உள்ள தொழில் நுட்பத்தின் அடிப்படையிலான மொனிட்டரை வாங்குங்கள்.
எடுத்துக்காட்டாக Examble தற்போதெல்லாம் சி.ஆர்.டி CRT எனப்படும் பழைய டிவி போன்ற மொனிட்டர்களை யாரும் வாங்கிப் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. அவற்றின் இடத்தில் தட்டையான எல்.சி.டி LCD மொனிட்டர்கள், மிகக் குறைவான விலையில் கிடைக்கின்றன. அவற்றில் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search