-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பாகிஸ்தான் எல்லையில் இந்தியாவின் புதிய பிரம்மோஸ் ஏவுகணை


டெல்லி: ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் 290 கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக சோதித்தது. அது மட்டமல்ல, இந்த ஏவுகணைகளை உள்ளடக்கிய புதிய படைப் பிரிவை பாகிஸ்தானை ஒட்டிய வடக்கு ராணுவ மண்டத்திலும் இந்தியா சேர்த்துள்ளது.

பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு முதலில் சீன எல்லையை ஒட்டிய கிழக்கு ராணுவ மண்டத்தில் தான் சேர்க்கப்பட்டது. இந் நிலையில் இப்போது இன்னொரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவு உருவாக்கப்பட்டு பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்கும் ராணுவத்தின் மேற்கு மண்டல பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த இரு பிரம்மோஸ் ஏவுகணைப் பிரிவுகளும் எந்த ராணுவ மையத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது ரகசியமாகும்.

இதன்மூலம் இந்தியா நினைத்தால் எந்த நேரத்திலும் அதிவேகத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகளை நமது அண்டை நாடுகளை நோக்கி செலுத்த முடியும்.

இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய இந்த பிரம்மோஸ் ஏவுகணையால் 290 கி.மீயையும் தாண்டி தாக்குதல் நடத்த முடியும். ஆனால், சர்வதேச ஏவுகணை கட்டுப்பாடு சட்டங்களுக்கு உட்பட்டு அதன் தாக்குதல் தூரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பிரம்மபுத்திரா நதியையும் ரஷ்யாவின் மாஸ்க்வா நதியையும் இணைத்துத் தான் பிரம்மோஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய சோதனை ராஜஸ்தானின் பொக்ரான் பாலைவனப் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த சோதனையை துணை தலைமை தளபதி லெப்டினென்ட் ஜெனரல் ஸ்ரீகிருஷ்ணா சிங், ராணுவ இயக்கக டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரி உள்ளிட்ட முக்கிய, மூத்த ராணுவ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

இந் நிலையில் பிரம்மோஸ் ஏவுகணையை நீர் மூழ்கிக் கப்பல்களில் பயன்படுத்தும் வகையிலும் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. விஞ்ஞானி ஏ.சிவதாணுபிள்ளை தலைமையிலான நிபுணர் குழு இந்த பிரமோஸ் ஏவுகணையை தயாரித்து வருகிறது.

தற்போது இந்த ஏவுகணையை தரையில் இருந்தும் விமானத்தில் இருந்தும் ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரேடார்களின் கண்களில் இருந்து தப்ப, இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரையில் இருந்து வெறும் 10 மீட்டர் உயரத்தில் 2.8 மேக் வேகத்தில், அதாவது ஒலியைவிட 3 மடங்கு வேகத்தில், பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டது பிரம்மோஸ்.

அடுத்த கட்டமாக தரை, நீர்மூழ்கி கப்பல், விமானம் ஆகியவற்றில் இருந்து ஒலியைக் காட்டிலும் 5 மடங்கு வேகத்தில் (ஹைபர்சோனிக்) சென்று தாக்கக் கூடிய பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக ஈடுபட்டுள்ளன.

DO You Need Web Site?