-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

தெருவோரத்தில் இரட்டையர்களைப் பெற்று பெண் மரணம் - இந்தியா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவமனைகள் அனுமதிக்காததால் தெருவோரத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற பெண் பரிதாபமாக உயிர் இழந்தார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்
டிடோ டான்டி. கட்டிடத் தொழிலாளி. அவரது மனைவி உஷா தேவி(40). அவர்கள் தெருவோரத்தில் குடிசை போட்டு வாழ்கின்றனர். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த உஷாவுக்கு இரவு 11 மணி அளவில் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து தெருவோரத்திலேயே அவருக்கு 12 மணிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

உடனே அவரை அருகில் உள்ள சித்தரஞ்சன் சிசு சதான் மருத்துவமனைக்கு டிடோ கொண்டு சென்றார். உஷாவிடம் அரசு கொடுத்த சுகாதார அட்டை இருந்தும் அவரை அனுமதிக்க மருத்துவமனை மறுத்துவிட்டது. இதையடுத்து டிடோ உஷாவை சாம்புநாத் பண்டிட் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அவர்களும் அவரை அனுமதிக்க மறுத்து ஏற்கனவே கொண்டு சென்ற மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.

டிடோ உஷாவை மீண்டும் சித்தரஞ்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதையடுத்து டிடோ போலீசில் புகார் கொடுத்தார். இந்த குற்றச்சாட்டை முதலில் மறுத்த சித்தரஞ்சன் மருத்துவமனை அதிகாரிகள் பிறகு அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாநில சுகாதாரத் துறை அதிகாரிகள் சாம்புநாத் மருத்துவமனைக்கு சென்றனர். இது உண்மை என்று தெரியும் பட்சத்தில் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

DO You Need Web Site?