அவுஸ்திரேலியாவில் அழைக்காத விருந்தாளியாக முதலை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. அங்குள்ள டார்வின் என்ற இடத்தில் வசிக்கும் குடும்பத்தினர் அதிகாலையில் எழுந்தபோது வளர்ப்பு நாய் குரைத்துக் கொண்டே இருந்தது.
அப்போது வீட்டில் இருந்த அறைக்குள் சுமார் 1.7 மீற்றர் நீளமுள்ள கடல்வாழ் முதலை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி வனவிலங்கு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனே அதிகாரிகள் விரைந்து வந்து முதலையை பிடித்து சென்றார்கள்.
வீட்டில் அருகேயுள்ள புதரில் இருந்து இந்த முதலை தப்பி வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

