ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பாதாள உலகின் எழுச்சி 4 (Underworld Awakening) : விரைவில் வரவிருக்கும் ஹாலிவூட் திரை

  ஹாலிவுட் படங்களில் இரண்டு வகை த்ரில்லர்களுக்கு எப்போதும் மவுசு உண்டு. அறிவியல் பின்னணியிலான கதைகள் ஒரு பக்கம் வெற்றி பெறுகின்றன. நவீன ஆயுதங்கள், வேற்று கிரக வாசிகள் என்று இப்படிப்பட்ட கதைகள் அதில் களை கட்டும். இன்னொரு பக்கம் மந்திர
வாதிகள், ரத்தக் காட்டேரிகள் என்பவை சம்மந்தப்பட்ட  கற்பனைகளும் வரவேற்பு பெறும். பழமையை கதையில் சொன்னாலும் அந்த கால கட்டத்தில் தங்களை பொருத்திக் கொண்டு ரசிகர்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள்.

            இந்த வகை பழமையும் நம்பிக்கையும் மர்மமும் மனத்தின் ரகசிய அறைகளில் பயப்புகை வர வழைக்கும்.  ரத்தக் காட்டேரீ  சம்பத்தப் பட்ட கதை தான்  "பாதாள உலகம் -4"  என வெளி வர உள்ளது. ஏற்கனவே இதே தலைப்பில் 3 படங்கள் வந்து வெற்றி பெற்று உள்ளன . ஒவ்வொரு படங்கள் வந்த போதும் அந்தந்த கால கட்டத்தில் ஆச்சரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின.பிரபல ஹாலிவுட் நட்சத்திரம் கேட் பெகின்சேல் செலின் என்கிற பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளர். முந்தைய அண்டர் வேர்ல்ட் வரிசையீல் இரண்டு படங்களில் கலக்கி இருக்கும் இவர். மூன்றாவதாக இந்த நான்காவது பாகத்தில் நடித்து உள்ளார். பன்முக நடிப்பு திறன் கொண்ட கேட் இப்படங்களில்  தன் பல பரிமானங்களை  வெளிப்படுத்தி இருக்கிறார். இப்போது வரவிருக்கும் படம் 3D தொழில் நுட்பமும் சேர்வதால் கேட் தனித்துவத்துடன் மிளிர்கிறார்.

                   "பாதாள உலகம் -4" படத்துக்கு இது வரை உலகில் எந்த படத்துக்கும் பயன்படுத்தாத ஒளிப்பதிவு பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கால கட்டத்தில் ரெட் கேமரா ஒரு அதிசயம் எனலாம் .  இது வரை வினாடிக்கு அதிக பட்சம் 72 பிரேம்கள் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வினாடிக்கு 120 பிரேம்கள் வேகத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளது சிறப்பம்சம். அதை பார்ப்பவர்கள் காட்சியில் வித்தியாசத்தை உணர்வார்கள். அது மட்டுமல்ல ஸ்டிரீயோ போனிக் முறையில் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உள்ளனர்.

          இப்படம் உலகமெங்கும் வரும் ஜனவரி 20 முதல் ரசிகர்களை கவர வருகிறது. இந்தியாவில் தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வெளி வருகிறது. சோனி பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது. தியேட்டருக்கு வரும் பொங்கல் திரைப்படங்களையெல்லாம் பார்த்து முடித்துவிட்டீர்கள் என்றால் நிச்சயம் இதையும் சென்று ஒரு முறை பார்த்துவிடுங்கள்.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search