ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் குட்டிக் கார்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பஜாஜ் குட்டிக் கார் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனமான பஜாஜ்
ஆட்டோ குறைந்த விலை கொண்ட குட்டிக் காரை தயாரித்து வருகிறது. இந்த குட்டிக்காரை ரினால்ட் மற்றும் நிசான் நிறுவனத்தின் கூட்டணியில் தயாரித்து விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டிருந்தது.

வடிவமைப்பு மற்றும் உற்பத்தியை பஜாஜ் ஆட்டோவும், மார்க்கெட்டிங் மற்றும் விற்பனையை ரினால்ட்-நிசானும் ஏற்க இருந்தன. ஆனால், குட்டிக்கார் தரம் உள்ளிட்ட விஷயங்களில் எதிர்பார்த்த அளவு இல்லை என்று கூறி ரினால்ட் விலகிக்கொண்டதாக தெரிகிறது. மேலும், இந்த கூட்டணி இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இழுபறியில் இருக்கிறது.

இந்த நிலையில், மேம்படுத்திய அம்சங்களுடன் தனது புதிய குட்டிக் காரை டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பார்வைக்கு வைக்க பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய குட்டிக் கார் டாடா நானோவுக்கு நேரடி போட்டியாக வரும் என்று தெரிகிறது. மேலும், மைலேஜில் நானோவை விஞ்சும் என்றும் பஜாஜ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நானோ கார் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் செல்கிறது. ஆனால், பஜாஜ் குட்டிக் கார் லிட்டருக்கு 30 கிமீ செல்லும் என்று பஜாஜ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதவிர, இந்த குட்டிக் கார் பிளாட்பார்மில் புதிய மினிவேனையும் பஜாஜ் வடிவமைத்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search