ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் சம்பாதிக்க உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 9578761657- தமிழ் உலகம்

தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பூமியைப் போன்றே புதிய கிரகம் கண்டுபிடிப்பு

சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.

அண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற
வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது. 

வெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.

அதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன.

சூரியன் போன்ற நட்சத்திரம் ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது. 

கெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.

 

 

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search