-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

செயற்கை ரத்தம்

அனைத்து வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது. அவசர தேவையின் போது உடனடியாக ரத்தம் கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதை தடுக்க தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகள் செயற்கை முறையில் ரத்தம் தயாரித்துள்ளனர். இவற்றை ஸ்டெம் செல்களில் இருந்து
தயாரித்து இருக்கின்றனர். இங்கிலாந்தின் எடின்பர்க் மற்றும் பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இதற்கான ஆய்வை மேற்கொண்டனர். ஸ்டெம்செல்களில் இருந்து ஆயிரக்கணக்கான மில்லியன் சிவப்பு அணுக்களை உருவாக்கினர். அதை பரிசோதனை கூடத்தில் வைத்து செயற்கை ரத்தத்தை உருவாக்கினர்.

இந்த ரத்தம் 25 லட்சம் சிவப்பு அணுக்களை கொண்டது. இவற்றை மனித உடலில் செலுத்த முடியும். எந்தவிதமான நோய் தொற்றும் ஏற்படாது. இவை இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வருகிறது. இவற்றை இருதய ஆபரேசன், இருதய மாற்று ஆபரேசன் மற்றும் புற்று நோய் பாதித்தவர்களும் பயன்படுத்தலாம். இதன் மூலம் லட்சக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாக்கப்படும் என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

DO You Need Web Site?