ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

உலகின் முக்கிய புரட்சிகள் - ஒரு பார்வை

ஆங்கிலேயப் புரட்சி
1688 இல் இங்கிலாந்தில் இடம்பெற்ற புரட்சி உலக வரலாற்றின் முக்கிய கட்டமாக கருதப்படுவதற்கான காரணம் அப்புரட்சியின் மூலம் நாட்டுக்கு நிர்வாகம் சார்ந்த சகல அதிகாரங்களையும் மன்னரிடம் இருந்து பாராளுமன்றம் தமதாக்கி கொண்டமை யாகும்.

அமெரிக்க சுதந்திரப் போர்

15 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஏற்பட்ட நாடுகாண் பயணங்களின் விளைவாக அமெரிக்காக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்காவைக் கண்டுபிடித்த பின்னர் ஸ்பானியர், போர்த்துக்கேயர் , பிரான்சியர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், என்போர் அங்கே குடியேற்றங்களை அமைத்தனர்.

1776 இல் சுதந்திரப் போர் ஆரம்பமாகும்போது ஆங்கிலேயக் குடியேற்றங்கள் பதின்மூன்று வட அமெரிக்காவில் காணப்பட்டன. இந்த அமெரிக்க குடியேற்றங்களின் பிரஜைகள் தாய்நாடான பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்கு மேற்கொண்ட போராட்டம் அமெரிக்க சுதந்திரப் போர் எனப்படுகிறது.

இச்சுதந்திரப் போர் உலக வரலாற்றிலே முக்கியத்துவமான நிகழ்வாக கருதப்படுவதற்கான காரணங்களாவன :

 •  புலம் பெயர்ந்த பிரித்தானிய பேரரசுக்கு விரோதமாக குடியேற்ற வாசிகள் புரிந்து முதலாவது சுதந்திரப் போராக இருந்தமை
 •  சுதந்திரத்தைப் பெற்ற பின்னர் குடியேற்ற வாசிகள் உருவாக்கிய அரசியல் யாப்பே உலகில் எழுதப்பட்ட முதலாவது யாப்பாக அமைந்தவை.
 •  1773 ஆம் ஆண்டளவில் இப்போராட்டம் பொஸ்டன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேயிலை ஏற்றப்பட்ட கப்பல்களில் நுழைந்த போராளிகள் அங்கிருந்த தேயிலைப் பெட்டிகளைத் தூக்கி கடலில் எறிந்தனர். "பொஸ்டன் தேநீர் விருந்து என அழைக்கப்படும் இச்சம்பவமே சுதந்திரப் போரின் ஆரம்பமாக அமைந்தது.
 •  

1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி குடியேற்றவாசிகள் பிரித்தானியா ஆக்கத்திற்கு எதிராக சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டனர். நீண்ட கால யுத்தத்தின் பின்னர் 1783 ஆம் ஆண்டில் பிரான்ஸின் வேர்செயில்ஸ் மாளிகையில் பிரித்தானியா - அமெரிக்க நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா சுதந்திரமடைந்தது. இப்புதிய நாடு 1787 இல் தனக்கென அரசியல் யாப்பு ஒன்றை எழுதிக்கொண்டது. அதன் பின்னர் அமைக்கப்பட்ட அமெரிக்க அரசியல் யாப்பிற்கு அமைய தேர்தல் நடைபெற்று ஜோர்ஜ் வாஷிங்டன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

பிரான்சியப் புரட்சி
சுதந்திரம் , சமத்துவம், சகோதரத்துவம் எனும் எண்ணக்கருக்களை அடிப்படையாகக் கொண்டு பிரான்சில் இடம்பெற்ற மாபெரும் மாற்றமே பிரான்சியப் புரட்சியாகும்.

1789 பிரான்ஸை ஆண்டு கொண்டிருந்த பதினாறாம் லூயி மன்னனின் ஆட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அரசியல், சமூக, மாற்றமே பிரான்சியப் புரட்சி எனக் குறிப்பிடப்படுகிறது.

14 ஆம் லூயி மன்னனின் காலத்தில் இருந்தே பிரான்சியப் புரட்சிக்கான பின்னணி உருவாக்கி வந்தது. இம் மன்னன் சர்வாதிகாரியாக இருந்தாலும் ஆற்றல் மிக்க மன்னனாகக் காணப்பட்டான். ஆனால் புரட்சியின் பொது மன்னனாக இருந்த 16 ஆம் லூயி சலன புத்தி படைத்தவனாகவும், மோசமான நிர்வாகியாகவும் காணப்பட்டான். அரசனைச் சூழ்ந்திருந்த வரையறையற்ற அதிகாரமும், திறமையின்மையும் படுமோசமான நிர்வாகத்தை உருவாக்கியது.

இம்மன்னனது மனைவியான என்டோயினாட் அரசி பெருமிதம் பிடித்த வெளிநாட்டுப் பெண்ணாக இருந்ததோடு அரச நிர்வாகத்திலும் தலையீடு செய்து வந்தாள். சாதாரண மக்கள் பசிக்குப் பாண் கேட்டுப் போராடியபோது "பாண் இல்லையேல் கேக் சாப்பிடுங்கள் " என்று குறிப்பிடுவதற்கு அம்மக்களைப் பற்றி அவள் அறிந்திராமையே காரணமாகும். இவ்வாறு மன்னனுக்கும் மக்களுக்கும் தொடர்பில்லாமல் இருந்தமை பொதுமக்களை மனக் குழப்பமடையச் செய்து அது புரட்சி ஒன்றாக உருவாவதற்கு வழிவகுத்தது .

கைத்தொழில் புரட்சி
18 ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உலகெங்கிலும் குடியேற்றங்களைக் கொண்டிருந்தன. இதனால் பரந்த சந்தைகள் கிடைக்கப்பெற்றமையும், சனத்தொகை பெருகிச் சென்றமையும் வியாபாரச் சமூகம் விருத்தியடைந்தமையும் உற்பத்தித்துறையில் பாரிய மாற்றங்களை வேண்டி நின்றான். இந்நிலையில் கைத்தொழில் புரட்சி முதலில் இடம் பெற்றது பிரித்தானியா நாட்டிலாகும்.
இவ்வாறான பல்வேறு காரணங்களால் விருத்தியுற்ற கைத்தொழிற் புரட்சி கீழ்வரும் தொழில் துறைகளில் இடம் பெற்றன.
1. நெசவு
2. நிலக்கரி.
3. இரும்பு.

நெசவுக் கைத்தொழில்
 • 1733 இல் ஜோன் கே என்பவரால் நெசவு இயந்திரம் ஒன்று வடிவமைக்கப்பட்டது.
 • 1767 இல் ஜேம்ஸ் - அவ் கிரீஸ் என்பவரால் நூல் நூற்கும் ஸ்பினிங் ஜெனி எனும் இயந்திரம் கண்டறியப்பட்டது.
 • றிச்சட் ஆக்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட நீர்ச்சட்டத்தால் கைகளினால் கருவியை சுழற்றுவதற்குப் பதிலாக நீரின் உதவியால் அதனை மேற்கொள்ள முடிந்தது.
 • 1779 இல் சாமுவேல் குரோம்பட்ன் கண்டறிந்த மியூஸ் இயந்திரத்தால் நூல்நூற்றல் மேலும் வேகமடைந்தது ஜெனி, மியூஸ் இயந்திரங்களை இயக்க நீர்ச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.
 •  எட்மன்ட் காட்ரைட் என்பவரால் கண்டறியப்பட்ட விசைத் தரியினால் உற்பத்தி செய்த துணியைப் போல் நான்கு மடங்கை ஒரு சிறுவனால் உற்பத்தி செய்ய இயலுமாயிருந்தது. 1785 இல் பாரிய நெசவாலை ஒன்று உருவாக்கப்பட்டது.

இரும்புருக்குத் தொழில்
கைத்தொழில் புரட்சிக்கு முன்னர் ஆயுத உற்பத்திக்கே இரும்பு பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இக்காலத்தில் இயந்திர சாதனங்களின் உற்பத்திக்காக இரும்பு பெருமளவு தேவைப்பட்டது.
 • 1730 இல் ஆபிரஹாம் டாப் என்பவரின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து இரும்புத்தாதை உருவாக்குவதற்கு விறகுக்குப் பதிலாக நிலக்கரியப் பயன்படுத்தக் கூடியதாயிரு ந்தது.
 • 1856 இல் பேஸ்மர் இரும்பை உருக்கும் போது உருவாகும் கழிவை அகற்றுவதற்கான முறை ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
 • 1831 இல் நீல்சன் என்பவர் கொத்தி உலையைக் கண்டறிந்ததால் சக்தி வாய்ந்த உலோகமான உருக்கின் உற்பத்தி வளர்ச்சியடைந்தது.
 • 1846 இல் சீமன் என்பவர் திறந்த உலையை நிர்மாணித்தார். இவற்றால் அவசரமாகவும், அதிகமாகவும் இரும்பையும் உருக்கையும் உற்பத்தி செய்யக்கூடியதாயிருந்தது

ஆரம்ப காலத்தில் சுரங்கத்தினுள் தேங்கும் நீர் கைகளினாலேயே இறைக்கப்பட்டது. காணப்படும் வெப்பத்தைத் தணிக்கக் குளிரூட்டப்பட்ட காற்று செலுத்தப்பட வேண்டியிருந்தது. இப்பிரச்சனைகள் இரண்டையும் 1712 நிவ் கோமான் என்பவர் கண்டறிந்த நீராவியால் இயங்கும் எஞ்சின் மூலம் தீர்த்துக் கொள்ளக்கூடியதாயிருந்தது.
1812 இல் ஹம்பறி டேவ்வால கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பான விளக்கால் நிக்கறிச் சுரங்கத் தொழில் பாதுகாப்பு மிக்கதாக மாறியது.

போக்குவரத்துத் துறையில் கைத்தொழிற்புரட்சி
18ம் நூற்றாண்டில் பிரித்தானியாவில் பெருந்தெருக்களும் புகையிரதப் பாதைகளும் கால்வாய்களம் உருவாக்கப்பட்டன . 1811 இல் மெகடம் " என்பவரால் கர்பாதைகள் உருவாக்கப்பட்டன. மெகடம் முறையால் இங்கிலாந்திலும் ஸ்கொட்லாந்திலும் பரவலாகப் பாதைகள் அமைக்கப்பட்டன.
 • 1807 இல் ஜேம்ஸ் வோட்டின் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி அமெரிக்கரான ரொபட் புல்டன் " குரோடொட்" எனும் புகைப்படகை முதன் முதலில் ஓடவிட்டார்.
 • 1811 இல் பிரயாணிகளை ஏற்றிச் செல்லத்தக்க புகைக்கப்பலை ஹென்றி பெல் உருவாக்கினார்.
 • 1814 இல் ஜோர்ச் ஸ்டீவன்சன், நீராவியால் இயங்கும் புகையிரதத்தை ஓடவிட்டார்.
 • 1885 இல் ஜெர்மனியில் டெம்லரல் முதலாவது மோட்டார் வாகனம் கண்டறியப்பட்டது.
 • 1903 இல் அமெரிக்காவில் ரைட் சகோதரர்களால் விமானம் உருவாக்கப்பட்டது.

தொலைத் தொடர்புத் துறையில் கைத்தொழிற்புரட்சியின் பங்களிப்பு
 • 1840 இல் நாட்டில் எவ்விடத்திற்கும் ஒரு பென்ஸ் செலவில் கடிதமனுப்பும் சேவை உருவானது.
 • 1844 இல் அமெரிக்கரான சாமுவேல் மோஸ் தந்திச் சேவையை அறிமுகம் செய்தார்.
 • 1876 இல் அமெரிக்கரான கிரஹம் பெல் தொலைபேசியைக் கண்டு பிடித்தார்.
 • 1895 இல் இத்தாலியரான மார்க்கோணி வானொலியை உலகிற்கு அறிமுகம் செய்தார்
 • 1940 இல் ஜோன் லொகி பெயார்ட் தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தார்.

கைத்தொழில் புரட்சியின் பரம்பல்
18 ஆம் நூற்றாண்டில் பெரிய பிரித்தானியாவில் ஆரம்பமான கைத்தொழில் புரட்சி 19 ஆம் நூற்றாண்டின் மத்தியை அடையும்போது உலகத்தின் பெரும்பாலான நாடுகளுக்குப் பரவி 20ஆம் நூற்றாண்டில் உலகையே ஆட்கொண்டு 21 ஆம் நூற்றாண்டில் உலகெங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.


0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search