ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

படிப்பு விசயத்தில் குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகள்!

என் குழந்தை படு சுட்டி, துறு துறு வென்று எதையாவது செய்து கொண்டிருப்பான். ஆனால் படிப்பு விசயத்தில் சரியாக கவனம் செலுத்துவதில்லை என்று கவலைப்படும் தாய்மார்கள் பலர் உண்டு. அறிவுக்கூர்மையுடன் இருக்கும் குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருந்தால் அவர்களின் கற்றல் திறனில் குறைபாடு உள்ளதா என்பதை கவனிக்க
வேண்டும். தெளிவாக பேசும் குழந்தைகள் கூட தான் கிரகித்துக்கொண்டதை வெளிப்படுத்த முடியாமல் போவதுதான் இந்த குறைபாடு. இதை லேர்னிங் டிசபிலிட்டி எனவும் சுருக்கமாக எல்.டி என்றும் மருத்துவத்துறையினர் பெயரிட்டுள்ளனர்.

எல்.டி யின் பாதிப்பு

மூளை கட்டமைப்பில் ஏற்படும் கோளாறு காரணமாகத்தான் குழந்தைகளின் புரிந்து கொள்ளும் திறனில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பிரச்சினைக்கு உள்ளான குழந்தைகள், படு திறமைசாலியாக இருப்பர்; சில குழந்தைகள் திறமை குறைவாக இருப்பர்.

எல். டி பாதித்த குழந்தைகள் சிலருக்கு எந்த ஒரு விஷயத்தையும் புரிந்து கொள்ளத் தெரியாது; அது போல, தெரிந்த விஷயத்தை ஒன்றுடன் ஒன்று சேர்த்து புரிந்து கொள்ளவும் முடியாது.


சில சமயம், ஒரு அரிய விஷயத்தைப் புரிந்துக் கொள்வதைப் பார்த்து வியப்பாக இருக்கும்; அதையே எழுதும் போதும், திரும்பச் சொல்லும் போதும் மந்தத் தன்மை இருக்கும்.

படிக்கும் போதும், எழுதும் போதும், அப்படி கற்ற விஷயத்தை, கணித்ததை மீண்டும் சோதித்துப் பார்க்கும் போது, அறவே முடியாத நிலை தான் எல்.டி., இதனால் தான் தேர்வுகளில் இப்படிப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து தோல்வி அடைகின்றனர்.

கற்றல் குறைபாட்டின் வகைகள்

கற்கும் திறனில் பலவகைகள் உள்ளன. கவனித்து படிப்பது. படித்தை புரிந்து கொள்வது, நினைவு படுத்தி எழுதத் தெரிவது, பகுத்தறிவது, நினைவில் பதிந்து கொள்வது போன்றவை எல்லாம் கற்றல் சார்ந்தவை. இதில் ஏதாவது ஒன்றில் குறைபாடு ஏற்பட்டாலும் அது குழந்தைகளின் கற்கும் திறனை பாதிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மூளையில் உள்ள நரம்பு மண்டல கோளாறு இது; அசாதாரணமாக இயங்குவதால் ஏற்படுகிறது. பேசுவது, எழுதுவது, புரிந்ததை சொல்வது, கிரகித்துக் கொள்வது என்று எதிலும் மந்தமாக இருப்பதற்கு இது தான் காரணம் என்று சொல்ல முடியாது.


பரம்பரை கோளாறு

பிறந்து, தவழ்ந்து பேச ஆரம்பிக்கும் போதே இந்தக் கோளாறை கண்டுபிடித்து விடலாம். இரண்டு கிலோவுக்கு குறைவாக பிறப்பது, பத்து மாதத்துக்கு முன்பே பிறப்பது, போதுமான சத்துக்கள் கிடைக்காத நிலை ஆகியவை முக்கியக் காரணமாக உள்ளன.

மூளையில் உள்ள அசாதாரண இயக்கம் காரணமாக இருந்தாலும், பரம்பரைக் கோளாறு காரணமாகவும் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு ஏற்படலாம் என்றும் சொல்கின்றனர் நிபுணர்கள். தாய், தந்தை இருவரோ, இருவரில் ஒருவரோ மதுப் பழக்கத்துக்கு ஆட்பட்டதால், பிரசவத்திலேயே கருவை பாதித்திருக்கலாம்; கருத்தரிப்பின் போது சாப்பிட்ட மருந்து, மாத்திரைகள் கூட காரணமாக இருக்கலாம்.


குழந்தைகளை புரிந்து கொள்ளுங்கள்

இது மனக்கோளாறு அல்ல என்பதை முதலில் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ‘டிஸ்ப்ராக்சியா’ பாதித்த குழந்தை, மற்ற ஒத்த வயதுள்ள குழந்தையை விட, மிக தாமதமாகத்தான் நடக்க ஆரம்பிக்கும். எனினும், படிக்க பள்ளிக்கு அனுப்பும் வரை இந்தக் கோளாறு பற்றி கண்டுபிடிக்க முடியாது.

பள்ளியில் ஆசிரியர்கள் இத்தகைய குழந்தைகளைக் கண்டுபிடித்து கூற முடியும். அப்போது விசேஷ பள்ளியில் படிக்க அனுப்பினால் போதுமானது.

இது ஒரு வியாதி அல்ல. அதனால், மருந்து, மாத்திரையால் குணப்படுத்த முடியாது. அதே சமயம், குழந்தைப் பருவத்தில் இருந்தே இதற்கென உள்ள சிறப்பு பள்ளிகளில் படிக்க அனுப்ப வேண்டும். அப்புறம் பாருங்கள் உங்கள் குழந்தையைப்போல புத்திசாலி யாரும் இருக்க முடியாது.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search