ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

விண்வெளியிலிருந்து 3D யில் நேரடி ஒளிபரப்பு (வீடியோ)

மனிதகுலம் விண்வெளிக்கு காலடி எடுத்துவைத்து அரைநூற்றாண்டு கடந்துள்ள நிலையில், முதன் முறையாக 3D வீடியோ தொழில்நுட்பத்தின் மூலம்
விண்வெளியில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளை பூமிக்கு நேரடி ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் ESA (ஐரோப்பிய விண்வெளி முகவர் நிலையம்)
ஈடுபட்டுள்ளது.

விண்வெளிப்பயணத்தின் 28ம் பிரிவுக்கான விமான பொறியியலாளரும், வீடியோ பிளாக்கருமான ரோன் கேரன் ( Ron Garan) அண்டவெளியில் நிலைகொண்டிருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தின் (ISS) ஒரு பிரிவான ஐரோப்பாவின் கொலம்பஸ் ஆய்வகத்தில், இந்த 3D வீடியோ கமெராவின் (ERB-2) ஒளிபரப்பு சேவையை முதன் முறையாக பரிசோதித்தார.

பூமியின் வடிவத்தை ஒத்த பலூன் பந்து ஒன்றை கையில் வைத்து விளையாடிய படி, அவர் நிலைகொண்டிருந்த இடத்தின் ஆழம் மற்றும் இருப்பு என்பவற்றையும், இப்பதிவின் மூலம் அவர் உணரச்செய்தார்.
இந்நிகழ்வை படம்பிடித்த உயர் தொழில்நுட்ப கமெராவானது ESA Stereoscopic கமெரா குடும்பத்தின் இரண்டாம் தலைமுறை வடிவமைப்பாகும். நெதர்லாந்தின் Cosine BV மற்றும் இத்தாலியின் Techno System ஆகிய இணைந்து இக்கமெராவை வடிவமைத்தன.

ரோன் கெரன் விண்வெளியிலிருந்து பேசிய காட்சிகள் நெதர்லாந்தில் உள்ள ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மற்றும் தொழிநுட்ப மையத்தில் நேரடியாக பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. 3D கண்ணாடி அணிந்து அக்காட்சிகளை பார்த்த பார்வையாளர்கள் அதிசயித்து போயுள்ளனர்.

எதிர்காலத்தில் விண்வெளியில் மேற்கொள்ளவிருக்கும் ஆய்வுகள், பரிசோதனைகள் என்பவற்றை தொடர்ச்சியாக இக்கமெரா பதிவு செய்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இதனை  பூமியிலிருந்து பார்க்கும் மக்கள், தாமும் விண்வெளியில் உலாவுவது போன்ற ஒரு பிரமிப்பையும், விண்வெளி சூழல் எப்படி இருக்கும் என்ற உணர்வையும் தந்துவிடுகிறது.

தற்போது பரிசோதனை (DEMO) ரீதியில் தான் இக்காட்சிகள் பதிவு செய்
யப்பட்டுள்ளன.  விரைவில் உத்தியோகபூர்வமான விண்வெளி வீடியோ காட்சிகளை ESA வின் யூடியூப் சேனலில் 3D வடிவில் நீங்கள் பார்க்க போகிறீர்கள் என்கிறார் ESA வின் ஒருங்கிணைப்பாளர் மாஸிமோ ஸபடினி.

உங்கள் வீட்டில் முப்பரிமாண பிளாஸ்மா தொலைக்காட்சியும், முப்பரிமாணத்தை காண்பிக்கும் கண்ணாடியும் இருக்குமாயின், உங்கள் இருக்கைகளை விட்டு நகர மாட்டீர்கள் என்கிறார் அவர்.

ESA விண்வெளி ஆராய்ச்சியாளர் பாலோ நெஸ்போலி சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி பணிபுரியும் அவருடைய அடுத்த 6 மாத கால திட்டத்திற்கு குறித்த ERB-2 கமெரா மூலம் படப்பிடிப்பு மேற்கொள்ள பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search