ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

குழப்பத்தை ஏற்படுத்தும் ஏ.டி.எம்., மிஷின்கள்

நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல், எல்ல இடங்களிலும் வியாபித்திருக்கும் ஏ.டி.எம்., இயந்திரங்களை இயக்குவதில் ஒரே மாதிரியான செயல்பாட்டை வங்கிகள் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. உணவகம், மருத்துவமனைகள், பெட்ரோல் "பங்க்'க்கள், பொழுதுபோக்கு "மால்கள்' என பெரும்பாலான இடங்களில் மக்கள் பயன்படுத்துவது, "பிளாஸ்டிக் மணி'
என்றழைக்கப்படும் ஏ.டி. எம்., அட்டைகளை தான். பணம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டு விடுமோ, ஷாப்பிங்கின் போது பணப்பற்றாக்குறை ஏற்பட்டு விடு மோ போன்ற கவலைகளை, நீக்க வந்த நிவாரணி ஏ.டி.எம்., அட் டை.மொபைல் போன்களை போலவே, ஏழை - பணக்காரர், படித்தவர் - படிக்காதவர் என்ற வித்தியாசமின்றி அனைவரிடமும் ஏ.டி.எம்., அட்டை உள்ளது. காரணம், 500 ரூபாய் கொடுத்து கணக்கை துவங்கினாலே, வங்கிகள் ஏ.டி.எம்., அட்டைகள் வழங்கி விடுகின்றன.

மேலும் வங்கிகள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி, தங்களுடைய வங்கியின் ஏ.டி.எம்., மட்டுமல்லாது, பிற வங்கிகளின் ஏ.டி.எம்.,க்களிலும் பணம் எடுத்துக் கொள்ளும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 20ம், பிற ஏ.டி.எம்., பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் ரூபாய் 20ம், ஆண்டு பராமரிப்புக்கென ஒரு தொகையையும் இதற்கென வசூலிக்கிறது.ஏ.டி.எம்., அட்டையை, "ஸ்வைப்' செய்ய முடியாத இடத்திலும், தங்கள் வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் இல்லாத சமயங்களிலும், வாடிக்கையாளர்கள் வேறு ஏ.டி.எம்.,க்களை பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது, படித்தவர்களே சற்று திணறிப் போகின்றனர்; படிக்காதவர்களின் நிலைமையை சொல்ல தேவையில்லை.தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் முறைக்கும், பிற ஏ.டி.எம்.,மில் பணமெடுக்கும் முறைக்கும் உள்ளமுறை முற்றிலும் வேறாக உள்ளதுதான் இந்த குழப்பத்திற்கு காரணம். ஒவ்வொரு வங்கியையும் பொறுத்து, நான்கிலிருந்து, எட்டு நிலைகளில், பணம் எடுக்கும்படி வடவடிமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.எம்., கார்டை செருகும் நிலையிலும் வித்தியாசம் உள்ளது. சில ஏ.டி.எம்.,க்களில் கார்டை செருகி எடுத்துவிட்டு, மேற்கொண்டு நடவடிக்கைகளை தொடரும்படியாகவும், சில ஏ.டி.எம்.,களில், கார்டு இயந்திரத்திற்குள் உள்ளிழுக்கப்பட்டு, பணம் எடுத்து முடித்த பின் கார்டு வெளிவரும் முறையிலும் உள்ளதால், எளிமையான வசதியைக்கூட பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிலவற்றில், பட்டன் முறையும், சிலவற்றில் தொடுதிரை முறையும் உள்ளது. தொடுதிரை ஏ.டி.எம்., பழுதானா லோ, வேறு ஏதாவது பிரச் னை என்றாலோ புகார் செய்வதற்கான, "டோல் ப்ரீ' எண்கள் அறைக்குள்ளேயே ஒட்டப்பட்டிருக்கின்றன. இருந்தாலும், பெருவாரியான வாடிக்கையாளர்கள் அதை பயன்படுத்துவதில்லை.இந்த பிரச்னையை தீர்க்கும் வகையில் அனைத்து வங்கிகளின் ஏ.டி.எம்., இயந்திரங்களையும் ஒரே மாதிரி வடிவமைப்பதோடு, அவற்றின் செயல்பாட்டையும் ஒரே பாணியில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.வங்கிகள் எப்படி பராமரிக்கின்றன?ஏ.டி.எம்., இயந்திரங்கள் இயங்குவதில் வங்கிகளிடையே உள்ள ஒருங்கிணைப்பு குறித்து பேசிய வங்கி அதிகாரி ஒருவர், ""வங்கிகள், ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு, "சஸ்பென்ஸ் அக்கவுண்ட்டை' வைத்துள்ளது. அதன் மூலமாக வரவு-செலவுகளை "டேலி' செய்கிறது. உதாரணமாக, எஸ்.பி.ஐ., வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், கனரா வங்கி ஏ.டி.எம்.,மில் 5,000 ரூபாய் பணம் எடுக்கிறார் என்றால், அவருடைய கணக்கில் 5,020 ரூபாய் கழிக்கப்படும்.இது வங்கிகளின் "சஸ்பென்ஸ் அக்கவுண் ட்டில்' பதிவாகும். உடனே, எஸ்.பி.ஐ., வங்கி ஒன்றிலிருந்து இரண்டு மணி நேரத்துக்குள், கனரா வங்கி "அக்கவுண்ட்டில்' அந்த 5,000 ரூபாயை வரவு வைத்து விடும். இந்தமுறையிலேயே வங்கி களிடையே பணப்பறிமாற்றம் நடக் கிறது''

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search