ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

சாத்தான் வேதம் ஓதலாமா?

இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டு வரும் கோத்தபய ராஜபட்ச, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.  இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் கோத்தபய ராஜபட்சவுக்கு 


இந்தியத் தூதர் மூலம் மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று பேரவையில் விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பாக வியாழக்கிழமை முதல்வர் பேசியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் மேலும் பேசியதாவது: போர் நெறிமுறைகளை மீறி...: இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான போர் உச்சத்தில் இருந்த 2008 செப்டம்பர் முதல் 2009 மே வரையிலான காலத்தையும், அப்போது துப்பாக்கிச் சூட்டில் சிக்கிக் கொண்ட அப்பாவித் தமிழர்களின் நிலைமையையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்த ஐ.நா. குழு பல உண்மைகளைக் கண்டறிந்துள்ளது.  குண்டு மழைக்கு விலக்கு என இலங்கை அரசு அறிவித்த பகுதிகள் மீதும் அந் நாட்டு ராணுவம் குண்டு மழை பொழிந்தது. மருத்துவமனைகள் மீதும் இலங்கை ராணுவம் குண்டுகளை வீசியது. இலங்கை அரசை விமர்சித்தவர்கள்-ஊடகங்கள் உள்பட போர்ப் பகுதி வெளியே இருப்போர் மீதும் மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியது என பல மனிதாபிமானமற்ற, பன்னாட்டு போர் நெறிமுறை மீறல்களை ஐ.நா. ஆய்வுக் குழு கண்டறிந்துள்ளது. மிகப் பெரிய ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்று அறிவித்த பிறகும், குண்டுகளை வீசி பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்றுள்ளது என ஐ.நா. குழு கூறியுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் மக்களைச் சென்றடையாத வகையில் இலங்கை அரசு தடையை உருவாக்கியதாகவும் ஐ.நா. குழு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலானோர் கொடிய முறையில் கொல்லப்பட்டிருப்பதும் ஊடகங்களில் வெளியான கோரமான விடியோ காட்சிகளிலிருந்து தெளிவாகிறது.இலங்கை கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோத்தபய ராஜபட்ச அறிவுரை வழங்கியுள்ளார். இந்திய மீனவர்கள், புனிதப் பயணிகள் வந்து செல்லும்போது, பயண ஆவணங்களையோ அல்லது நுழைவு விசாவையோ பெற வேண்டும் என இலங்கை கோராது என்று இந்திய, இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்திய மீனவர்கள் கச்சத்தீவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுதந்திரமாக மீன் பிடிக்கலாம், வலைகளை உலர்த்துவதற்கு அந்தத் தீவை பயன்படுத்திக் கொள்ளலாம் என அப்போதைய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்துக்கு முற்றிலும் முரணாகச் செயல்பட்டு வரும் இலங்கை அரசு, தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றார் ஜெயலலிதா

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search