-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

கடாபியின் தலைக்கு விலை ஒரு மில்லியன் யூரோ?

கடாபியை உயிருடனோ, பிணமாகவோ கொண்டு வருபவர்களுக்கு 1 மில்லியன் யூரோ (8 கோடி ரூபாய்) வழங்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ள புதிய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் திரிபொலியை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியதை தொடர்ந்து கடாபி தலைமறைவாகிவிட்டார்.
கடாபியின் மாளிகையிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆல்பம்
இந்நிலையில், கடாபிக்கு மிக நெருக்கமானவர்கள் அவரை கொன்றாலோ அல்லது உயிருடன் பிடித்து வந்தாலோ அவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்படும். வேறு நபர்கள் கடாபியை பிடித்து வந்தால் 1 மில்லியன் யூரோ வழங்கப்படும் என கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று முன் தினம் இரவு கடாபி அளித்த வானொலி அறிவிப்பில் தான் தற்சமயம் பாதுகாப்பான இடத்தில் மறைந்திருப்பதாகவும், தலைநகர் திரிபொலி கிளர்ச்சியாளர்களினால் எந்தவொரு ஆபத்தையும் எதிர்கொள்ளவில்லை எனவும் தெரிவிவித்திருந்தார். மேலும், கிளர்ச்சியாளர்களை எதிர்த்து இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என லிபியர்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தார். கடாபியின் மகளும், இதே கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
திரிபொலியில் கடந்த மூன்று நாள் யுத்தத்தில், 400 பேர் படுகொலை செய்யப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதுடன்,  ரியொக்ஸ் நட்சத்திர விடுதியில் சிறைபிடிக்கப்பட்டிருந்த சர்வதேச ஊடகவியலாளர்களையும் அவர்கள் விடுவித்துள்ளனர்.
திரிபொலியிலிருந்து சுமார்  2000 மைல்களுக்கு செல்லும் பாதாள சுரங்க பாதையின் ஊடாக வெளிநாடு ஒன்றுக்கு கடாபி தப்பி சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.  கடாபியை கொல்லும் திட்டம் தமக்கில்லை என நேட்டோ படையினர் முன்னர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?