அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநுட்ப துறையில் புதிய பரிணாமமாக மனித மூளையின் செயற்பாடுகளை ஒத்த முன்மாதிரி 'சிப்' இனை உருவாக்கியுள்ளதாக ஐ.பி.எம் நிறுவனம் அறிவித்துள்ளது. இச் 'சிப்' ஆனது மனிதர்களின் மூளையைப் போல தரவுகளை செயன்முறைப்படுத்தக்கூடியன சூழலை உணர்தல், இலக்குகளைத் தெரிந்துகொள்ளல், சுற்றுவட்டாரத்துடன் தொடர்புகொள்ளல், சிக்கலான தரவுகளை உணர்ந்து கொண்டு சரியான பதிலை வழங்குதல் ஆகியவையே இதன் தயாரிப்புக்கான முக்கிய நோக்கம் என ஐ.பி.எம் தெரிவிக்கின்றது. செயற்கை நுண்ணறிவின் ( artificial intelligence ) அடிப்படையாக இதன் உருவாக்கமானது திகழுமென ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இதனை உருவாக்கும் திட்டமானது 100 ஆராய்ச்சியாளர்களின் பங்குபற்றுதலுடன் சுமார் 6 வருடங்களாக நடைபெற்றுள்ளது. இதற்காக ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சித் திட்டங்களுக்கான முகவர் நிலையம் சுமார் 41 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நிதியுதவியளித்துள்ளது. ஐ.பி. எம் அமைப்பும் இதற்கு நிதியுதவியளித்துள்ளது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.