-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

என் உயிரைப்பற்றி கவலையில்லை - அன்னா ஹஸாரே

மத்திய அரசின் லோக்பால் மசோதாவுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்துக்கு 3 நாட்கள் மட்டுமே டெல்லி போலீஸ் அனுமதி அளித்துள்ளதால் கடுப்பிலிருக்கும் ஹஸாரே, 'என் உயிரைப் பற்றி கவலையில்லை. திட்டமிட்டபடி உண்ணாவிரதம் தொடங்கும். காலவரையின்றி நடக்கும்," என்று அறிவித்துள்ளார்.



மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள லோக்பால் மசோதாவுக்கு பிரதமர், நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகளை விசாரிக்கும் அதிகாரம் இல்லை. எனவே அதை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்துவேன் என்று அன்னா ஹஸாரே அறிவித்துள்ளார்.

வருகிற 16-ந்தேதி டெல்லியில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தை தொடங்குகிறார். ஆரம்பத்தில் டெல்லி போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் டெல்லி பெரோஷா கோட்லா கிரிக்கெட் மைதானத்துக்கு அருகில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் பூங்காவில் உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தனக்கு திருப்திகரமாக உள்ளது என்று ஹஸாரே கூறியிருந்தார். அமைதியாக உண்ணாவிரதம் நடத்துவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில், ஹஸாரேவின் போராட்டம் அநீதியானது என மத்திய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார்.

3 நாட்கள் மட்டும்...

இதைத் தொடர்ந்து டெல்லி போலீசார் ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளனர். அதில் அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 3 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதன்படி, அன்னா ஹஸாரேவும் அவரது ஆதரவாளர்களும் 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடியும். அதற்கு மேல் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

தனது கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க ஹசாரே முடிவு செய்து இருந்தார். ஆனால் 3 நாட்கள் மட்டுமே போராட்டத்துக்கு அனுமதி என்று டெல்லி போலீசார் அறிவித்து இருப்பதால் ஹசாரேவும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசுடன் பேச்சுவார்த்தை

இதைத் தொடர்ந்து அரசுடன் பேச்சு நடத்த அன்னா ஹஸாரேவின் பிரதிநிதி நீரஜ்குமார் இரு முறை சென்று வந்துள்ளார்.

ஆனாலும் திருப்திகரமான முடிவு எட்டப்படவில்லை. எனவே உண்ணாவிரதத்துக்கு அனுமதி உண்டா இல்லையா என்று மட்டும் சொல்லுங்கள். என் உயிரைப்பற்றி கவலையில்லை. தடையை மீறி உண்ணாவிரதமிருப்பேன், என்று ஹஸாரே அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

DO You Need Web Site?