பெண்கள் ஓட்டுவதற்கு ஏதுவாக மிக தாழ்வான இருக்கையுடன் வடிவமைக்கப்பட்ட அசத்தலான குரூஸர் பைக்கை ஹார்லி டேவிட்சன் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் குரூஸர் பைக்குகளுக்கு இந்தியாவில் ஏக வரவேற்பு கிடைத்துள்ளது. ஆண்கள் மட்டுமின்றி
ஹார்லி டேவிட்சன் பைக்கை பெண்களும் ஆர்வமாக வாங்க துவங்கியுள்ளனர்.இதனால், தனது 14 குரூஸர் பைக்குகளை ஹார்லி டேவிட்சன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், மிக தாழ்வான இருக்கை கொண்ட ஃபேட்பாய் குரூஸர் பைக்கையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஹார்லி டேவிட்சன்.
கறுப்பு கலரில் குரோம் பூச்சுடன் வந்துள்ள இந்த பைக் கண்களை விட்டு அகல மறுக்கிறது.வி-ட்வின் எஞ்சின் ஹெட்டுகளில் ஆங்காங்கே கறு்பபு வண்ண கலவை பொருத்தமாக பூசப்பட்டுள்ளது.
3,500 ஆர்பிஎம் வேகத்தில் 125 என்எம் டார்க்கை கொடுக்கும் என்பது கூடுதல் சிறப்பு. இதனால், ரைடிங்கில் ஓர் புதிய அனுபவத்தை பெறும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் இரட்டை சைலன்சர் பார்க்கும்போதே மிரட்டுகிறது.
விலைதான் நடுங்க வைக்கிறது என்றாலும், ஃபேட்பாய் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு, கடன் வழங்குவதற்காக எச்டிஎப்சி வங்கியுடன் ஹார்லி டேவிட்சன் ஒப்பந்தம் செய்துள்ளது.
புதிய ஃபேட்பாய் குரூஸர் பைக் ரூ.19.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.