-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பயணிகள் விமான இறக்கைகளின் அடியில் போகக் கூடாது ஏன்?

விமானங்களில் நீங்கள் ஏறுவதற்கு முன்னர், விமான
நிலையங்களில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்த சம்பிரதாயங்களை எல்லாம் முடித்து விட்டு ஒரு வழியாக விமானத்திற்கு அருகே சென்றதும், கூம்புகள் போன்ற ஏதேனும் தடுப்புகளை வைத்து, விமானத்துடைய இறக்கைகளின் கீழ் பகுதி தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

விமானத்துடைய இறக்கைகளின் கீழ் பகுதியில் யாரும் நடக்க கூடாது என்பதை தெரிவிப்பதற்காகவே, அங்கு தடுப்புகளை வைக்கின்றனர். விமானங்களில் ஏற செல்லும்போது, ஏன் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு நமக்கு அனுமதி தர மறுக்கின்றனர் என நீங்கள் என்றாவது யோசனை செய்திருக்கலாம். உங்களின் இந்த சந்தேகத்திற்கு Doubts இந்த செய்தியில் விடையளித்துள்ளோம்.

முழுக்க முழுக்க பாதுகாப்பு கருதியே விமானங்களின் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனை புரிந்து கொள்ள வேண்டுமானால், முதலில் விமானங்களில் இன்ஜின் எங்கே பொருத்தப்பட்டிருக்கும்? என்பதை நீங்கள் தெரிந்து கொள்வது முக்கியமானது.



தற்போதைய சூழலில் பல்வேறு வகையான விமானங்கள் நடைமுறையில் இருக்கின்றன. ஆனால் வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் விமானங்களில் பொதுவாக இரண்டு பகுதிகளில் மட்டுமே இன்ஜினை பொருத்துகின்றனர். இதில், இறக்கைகளும் ஒரு பகுதியாக உள்ளன. வர்த்தக ரீதியில் உபயோகிக்கப்படும் பெரும்பாலான விமானங்களில் இறக்கைகளின் கீழ் பகுதியில்தான் இன்ஜின் வழங்கப்பட்டிருக்கும்.

ஒருவேளை இறக்கைகளின் கீழ் பகுதியில் இன்ஜின் இல்லை என்றால், அனேகமாக வால் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கலாம். வர்த்தக விமானங்களை பொறுத்தவரை, இந்த இரண்டு பகுதிகளில்தான் பெரும்பாலும் இன்ஜின்கள் பொருத்தப்படும்.


தற்போது விமான இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு ஏன் பயணிகளை அனுமதிப்பதில்லை? என்ற கேள்விக்கு வருவோம். இன்ஜின்கள் இருப்பதால், பாதுகாப்பு கருதியே இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஒரு விமானத்தின் மிகவும் அபாயகரமான Accident zone  பகுதிகளில் ஒன்றாக இன்ஜின் அமைந்துள்ள இடம் கருதப்படுகிறது.

அத்துடன் பயணிகளால் ஏதேனும் பழுது ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்கு மிகவும் அதிகமாக செலவு ஆகும். மேலும் விமானம் தரையிறங்கிய பின்னரும் இன்ஜின் மிகவும் சூடாக இருக்கும். அந்த நேரத்தில் நீங்கள் இன்ஜினிற்கு மிகவும் நெருக்கமாக சென்றால் என்ன நடக்கும்? என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.



இன்ஜின் அமைந்துள்ளது என்பதை தவிர, இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு இன்னும் சில காரணங்களும் உள்ளன. நீங்கள் விமானத்தில் ஏற செல்லும்போது, ஊழியர்கள் விமானத்தை புறப்பட தயார் செய்து கொண்டிருப்பார்கள். இதில், லக்கேஜ்களை Luggage  ஏற்றுவது மற்றும் விமானத்திற்கு எரிபொருள் நிரப்புவது ஆகிய முக்கியமான பணிகள் அடங்கும்.

விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் பணிகளில் பல்வேறு அபாயங்கள் இருக்கின்றன. இதன் காரணமாகவும் இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. எரிபொருள் நிரப்புவதற்கும், இறக்கைகளின் கீழ் பகுதியில் நடப்பதற்கும் என்ன சம்பந்தம்? என நீங்கள் கேட்கலாம். விமானங்களை பொறுத்தவரை இறக்கைகளில்தான் எரிபொருள் தொட்டி Fuel Tank வழங்கப்பட்டிருக்கும்.

ஆம், விமானங்கள் Flights பெரும்பாலும் இறக்கைகளில்தான் எரிபொருளை சேமிக்கின்றன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கு நீண்ட நேரம் ஆகும். தொலை தூரம் பயணிக்கும் விமானங்கள் என்றால், எரிபொருள் Fuel நிரப்புவதற்கு 40 நிமிடங்கள் minutes வரை ஆகலாம். இதனை கருத்தில் கொண்டும், இறக்கைகளின் Fans கீழ் பகுதியில் நடப்பதற்கு பயணிகள் Passenger அனுமதிக்கப்படுவதில்லை.


DO You Need Web Site?