-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

வுகான் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்.. கட்டுப்படுத்தமுடியாமல் திணறும் பொலிசார்..!

சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஆரம்பித்த கொரோனாவா வைரஸின் பாதிப்பு உலகம் முழுவதும், பல நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.



வுகான் மாகாணத்தில் கட்டுக்கடங்காமல் இருந்த கொரோனா சீனாவையே புரட்டி போட்டது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாகப் பரவி, மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு மற்றும் மருத்துவர்களின் தீவிர முயற்சியினால் அங்கு வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது.

தற்போது வுகான் மாகாணத்தில் இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் நடமாடத் தொடங்கியுள்ளார்கள். போக்குவரத்தும் தற்போது தொடங்கியுள்ளது.

இதனைப் பயன்படுத்தி மக்கள் தற்போது, கூட்டம் கூட்டமாக ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேறத் தொடங்கியுள்ளார்கள். அது தான் தற்போது பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மக்கள் கூட்டம் பேருந்து மற்றும் ரயில்களில் அலைமோதுகிறது.

இதையடுத்து, அங்கு பொலிசார் அதனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வன்முறை வெடித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, சாலைகளைத் திறந்து வெளி மாநிலங்களுக்குச் செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது.

ஹூபே மாகாணத்துடன் ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்திலும் மோதல் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வீடியோகள் வெளியாகி வைரலாகி வருகின்றன உள்ளன.

DO You Need Web Site?