-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

பொள்ளாச்சியில் ஓர் கோடை உலா

பொள்ளாச்சி, தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ள இவ்வூர், அம்மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். பொள்ளாச்சி, மேற்குத் தொடர்ச்சி மலைக்கு அருகில்
அமைந்துள்ளதால், இங்கு வருடந்தோறும் வானிலை ரம்மியமாக இருப்பதுடன், மனம் விட்டு ரசிக்கத்தக்க இயற்கை அழகுடனும் திகழ்கிறது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த நகரம், சினிமாத்துறையினர் மிகவும் விரும்பும் ஒரு இடமாக உள்ளது. கடந்த சில வருடங்களில் மட்டும் சுமார் 1500 திரைப்படங்கள் இங்கே எடுக்கப்பட்டுள்ளன. 

பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்


பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலாத் தலமாகும். பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது. அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன. இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன. நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும்.


இந்நகர் ஆனைமலை வனவிலங்கு சரணாலையம், டாப் ஸ்லிப், வால்பாறை, அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது.

இந்நகரத்தின் வரலாறு 

பொள்ளாச்சியின் புராதனப் பெயர், “இயற்கை வளமும், செல்வமும் கொழிக்கும் நாடு” என்ற அர்த்தத்தில் வழங்கப்பட்டு வந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரே ஆகும். மூன்றாவது குலோத்துங்கச் சோழரின் ஆட்சிக்காலத்தில், இவ்வூர், “முடி கொண்ட சோழநல்லூர்” என்றும் அழைக்கப்பட்டுள்ளது.

இவ்வூருக்கு, “வளமான அரசு ஆண்ட இடம்” என்று பொருள் தரும் வகையில் அமைந்த “பொருள் ஆட்சி” என்ற பெயரும் உண்டு. “பொள்ளாச்சி சந்தை” என்றழைக்கப்படும் இவ்வூர் சந்தை, வளமானது என்றும், சரித்திரப் பிரசித்தி பெற்றது என்றும் கூறப்படுகிறது. 

பொள்ளாச்சிக்கு செல்வது எப்படி? 

கோயம்புத்தூர் விமான நிலையம் பொள்ளாச்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. முக்கியமான, அனைத்து இந்திய, தென்னாசிய, மற்றும் வளைகுடா நகரங்களுக்கும், இங்கிருந்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் உள்ளன. பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து, அருகில் உள்ள ஊர்களுக்கு, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர் இரயில் நிலையமே, இவ்வூருக்கு மிக அருகில் அமைந்துள்ள இரயில் நிலையமாகும். பொள்ளாச்சியின் வானிலை பொள்ளாச்சியில் வருடந்தோறும் மிதமான, ரம்மியமான வானிலையே நிலவுகிறது. சுற்றுலா செல்வதற்கு, வருடம் முழுவதும் ஏற்ற இடமாக இருப்பினும், மிகவும் இனிய வானிலை நிலவக்கூடிய மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில், இந்நகரம், மிகுந்த பொலிவுடன் காணப்படும். 

DO You Need Web Site?