உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ் மக்கள் உரிமை மீட்பு விடுதலைப் போராட்டம் - வேடிக்கை பார்க்காமல் கேள்வி கேட்போம் ..

நமது பாரம்பர்ய விளையாட்டை மீட்டெடுக்க வந்த லட்சக்கணக்கான மக்கள், உரிமை மற்றும் வாழ்வாதாரப் பிரச்னைகளின்போது ஏன் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் வீதிக்கு வந்து போராடத் தயங்குகிறார்கள்? போலீஸார் அடிப்பார்கள், கைது செய்வார்கள் என்ற பயமா?


இப்படி அனைத்துக்கும் பயந்துகொண்டே இருந்தால், எப்படியோ சகித்துக்கொண்டு நாம் வாழ்ந்துவிட்டு சென்றுவிடலாம். ஆனால், நமது சந்ததி இங்கு எப்படி வாழ்வார்கள்? அவர்களுக்காக என்ன வளத்தை, என்ன வாழ்வாதாரத்தை நாம் விட்டுச் செல்லப்போகிறோம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கூடிய லட்சக்கணக்கான மக்கள் எங்கே? ஜல்லிக்கட்டுக்குப் பிறகுவிவசாயிகள் பிரச்னை, நீட் தேர்வு, நதி நீர் பிரச்னை, தற்போது பேருந்துக் கட்டண உயர்வு.... இன்னும் எவ்வளவோ பிரச்னைகள் நம்மை சூழ்ந்துகொண்டு இருக்கின்றன.

பஸ்ஸில் ஏற பணம் இல்லையே என பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்லும்… பஸ்சை  ஏக்கத்தோடு பார்க்கும் தமிழகத்தின் கடை கோடி ஏழைத் தமிழனுக்கு… படித்த, அறிவார்ந்த நம் இளைஞர் சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது?

ஒட்டு மொத்த நம் தமிழ் சமூகத்தின் வலிக்கு என்னதான் மருந்து?

தமிழ் சமூகம் வேடிக்கைதான் பார்க்குமோ ... இல்லை வேள்வி செய்யுமா?

தமிழ்நாட்டில் எந்தத் தப்பு நடந்தாலும் தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் வர வேண்டும். அரசியல்வாதிகள் எதையும் நமக்கு ஓசியில் செய்துவிடவில்லை. தண்ணீர், உணவு, வாழ்விடம், மின்சாரம் என அனைத்துக்குமே நாம் வரி கட்டிக்கொண்டுதான் இருக்கிறோம். அப்படி வாங்கும் வரிப் பணத்தில் ஒரு சிறிய அளவேனும் மக்களுக்கு நல்லது செய்கிறார்களா? நமது உரிமை பறிபோகும்போது, அதை மீட்க அனைவரும் வீதிக்கு வாருங்கள். வீறு கொண்டு நிற்கும் தமிழர்களை தரணி பார்க்கட்டும்…

பஸ் கட்டண உயர்வு தனி மனிதர்களுக்கானது அல்ல எல்லோருக்கும்தானே! கட்சி பாகுபாடின்றி அனைவரும் களம் புகுந்து போராடவேண்டிய விசயமல்லவா ...

கேள்வி கேட்க வேண்டாமா?

பக்கத்து மாநிலங்களை பாருங்கள் ஏழு ஆண்டுகளில் பஸ் கட்டணத்தை எத்தனை முறை உயர்த்தி விட்டார்கள் என்று மக்களின் வாயை அடைக்கப் பார்க்கிறார்களே பக்கத்து மாநிலங்களில் ஏழு ஆண்டுகளில் எத்தனை நிறுவனங்கள் புதிதாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன? எத்தனை வேலை வாய்ப்புகள் மக்களுக்காக உருவாக்கப் பட்டுள்ளன? மக்களுக்காக எத்தனை முறை சட்ட மன்றங்களை கூட்டி மக்களை பற்றிப்பேசி மக்கள் பிரட்சனைகளை தீர்த்துள்ளார்கள் ... ஏழு ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் மக்களை பற்றி நினைக்கவாவது செய்தீர்களா? பாரம்பரிய விளையாட்டை பாதுகாக்கக் கூட மக்களை இரவு பகலாய் தெருவில் இறங்கி போராடச் செய்தீர்களே ... அமைதியாய் போராடிய எங்கள் தமிழ் இனச்செல்வங்களை மண்டையை உடைத்து துரத்தினீர்களே...எங்கள் தமிழ் நாட்டில் எங்கள் விளையாட்டை பாதுகாக்க எங்கள் இளைஞர்கள் போராடினால்  விளையாட்டைக்கூட பாதுகாக்க வக்கில்லாத நீங்கள் எங்களைக் கேட்காமல் அவர்களை   அடித்து இரத்தம் வரவைக்க யாரடா நீங்கள்? என்ற கேள்வி ஒவ்வொரு தமிழ் பெற்றோருக்கும் தொண்டைவரை வந்த போதும் ஒட்டுப் போட்ட ஒரே காரணத்துக்காக பொறுத்துக் கொண்டோமே    இனியும் எதை பொறுத்துக் கொள்ளச் சொல்லகிறீர்கள் எனக்கேள்வி கேட்க வேண்டாமா?  

மக்களுக்கு உதவ வேண்டிய அரசாங்கம் மக்களை கொள்ளையடிக்கத் துணியும்போது மக்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது நல்லதா?

அரசாங்கம் நடத்த பணம் வேண்டுமெனில் நல்ல பல தொழிற்சாலைகளை உருவாக்கி மக்களுக்கு வேலை வாய்ப்பை மட்டுமல்ல நல்ல இலாபத்தையும் உருவாக்க வேண்டும்அதை விடுத்து மக்கள் வயிற்றிலடிக்கக் கூடாது. பஸ் கட்டண உயர்வை பொறுத்துக் கொள்ளுங்கள் என மக்களை கெஞ்சும் கையாலாகத் தனத்தை எப்படிப் பொறுத்துக் கொள்வது?

நல்ல இயந்திரமாக மக்களுக்காக பணி செய்வதுதானே நல்ல அரசின் வேலை... மக்களிடம் பசியாற வைத்திருக்கும் மிச்சம் மீதி உள்ள பணத்தையும் எதையாவது சொல்லி பிடுங்கித் தின்ன அனுமதிக்கலாமா ... யோசியங்கள் மக்களே !!!

யார் போராடுவது?

அவர்கள் போராடட்டும் இவர்கள் போராட்டம் நடத்தட்டும் என்று இருக்காமல் நாம் ஏன் இன்னும் போராடவில்லை என்று யோசிக்கும் தருணமல்லவா  இது. வீரத்திலும் நாகரீகத்திலும் உலகுக்கே வழி காட்டிய நம் தமிழ் மக்கள் அவர்களுக்கே ஒரு பிரட்சனை எனும்போது வீறு கொண்டு, கட்சி பாகுபாடின்றி போராடி தமிழ்நாடு வந்தாரை வாழ வைக்கும் தேசம் மட்டுமல்ல அவர்களின் வாழ்வாதாரத்தை குலைக்க நினைக்கும் எவராக இருந்தாலும் ஓட ஓட விரட்டும் தேசம் என நிருபிக்க வேண்டாமா?

மக்கள் மக்களாகவே மாதிரி ஓட்டெடுப்பு நடத்தி ஓட்டுபோட்ட அரசு மக்களுக்கு எதிராக நடக்கும்போது வீட்டுக்கு திருப்பி அனுப்ப சட்டம் கொண்டு வர வேண்டும்.

தன்னெழுச்சி போராட்டங்கள் மூலம் பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வைக்க வேண்டும்.

அடக்கு முறைகள் மூலம் தமிழர்களை பணிய வைக்க முடியாது. நல்ல சட்டங்களுக்கே தமிழர்கள் பணித்து நடப்பவர்கள் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும்.

எவன் வேண்டுமானாலும் இனி தமிழகம் மட்டுமல்ல இந்தியாவை கொள்ளையடிக்க அனுமதிக்க மாட்டோம். மக்கள் விரும்பும் நல்லாட்சி நடத்துபவர்கள் மட்டும் இனி இங்கு அரசியலில் இருக்க முடியும் என்பதை மக்கள் அனைவர்க்கும் காட்ட வேண்டும்.போராட்டம் எந்த வடிவத்திலும்  இருக்கலாம்

மக்களே! அரசு, தனியார் ஊழியர்கள், மாணவர்கள்  பஸ் கட்டண உயர்வை எதித்து கறுப்புச் சட்டை அணிந்து செல்லுங்கள்

வீட்டை நிர்வகிப்பவர்கள் வீட்டின் மீது கறுப்புக் கொடி ஏற்றுங்கள்

இளைஞர்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துங்கள்

கவர்னருக்கு, முதல்வருக்கு, மாவட்ட ஆட்சியர்களுக்கு அமைதியான பஸ் கட்டண குறைப்பிற்கான  கோரிக்கைகளை மெயில் / விண்ணப்பம்  அனுப்பி வையுங்கள்.

காவல் துறை அனுமதி பெற்று உண்ணாவிரதம் அல்லது தர்ணா நடத்துங்கள்.

காந்தீய தேசம்

இது காந்தீய தேசம் வெள்ளையனையே கண்டு அஞ்சாத காந்தியின் பின்னால் நின்ற தேசம். ஒவ்வொரு தமிழனுக்குள்ளும் காந்தியின் எவனுக்கும் அடங்காத போராட்ட வெறி ஊரிக் கிடக்கிறதுஇன்னும் சில நாட்களில் நம் இளைஞர்கள் மட்டுமல்ல ஒவ்வொரு தமிழர்களும் அவரவர் கடமையை மட்டுமல்ல போராட்டக் களத்திலும் துணிந்து நிற்பவர்கள் என்பதை உலகம் காணும் ….

மக்களுக்கெதிரான அரசை மக்களே வீட்டுக்கு அனுப்பி வைத்து இந்திய வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றில் தமிழர்கள் இடம் பெற வேண்டும்

இந்தக் கட்டுரையை அனைவர்க்கும் பகிர்ந்து போராட்டத்தின் விதையாய் மாறுங்கள் உங்கள் எதிர்கால சந்ததி அமைதியான விருட்சத்தின் நிழலில் வாழ உதவுங்கள்

போராட்டக் களத்தில் உங்களுடன் ஜெயசெல்வன். Cell: 9791738809

மக்களுக்காக மக்களின் உரிமைகளுக்காக போராட விரும்பும்   சமூக அக்கறையுள்ள அனைவரும் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாவட்ட, தாலூக்கா, நகர வாரியாக போராட்டங்களை ஒருங்கிணைக்க, ஒழுங்கு செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.  

E mail: jayaselvancool@gmail.com

முகநூலில் பின் தொடர (For Facebook Followup)
https://www.facebook.com/profile.php?id=100007966395812

Tamil Ulagam Search