ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

மக்களே! உங்களின் குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்?


அனிதாவின் துயரம் . ஒட்டுமொத்த தமிழகத்தின் துயரமல்லவா? கஷ்டப்பட்டு படித்து, கனவுகளோடு காத்திருந்து கருகிய மனதோடு விழி பிதுங்கி நிற்கும் எதிர்காலத் தலைமுறையின், அவர்களைக் கண்ணீரோடு
கட்டியணைக்கும் பெற்றோர்களின், சமூகத்தில் நடக்கும் அநீதியை கண்ணால் பார்த்துக் கொண்டு கையறு நிலையில் தவிக்கும் என்னைப் போன்ற கோடானு கோடி மக்களின் துயரமல்லவா இது?

கையாலாகாத அரசியல்வாதிகளிடம் போராடிப் பார்த்தும் அரசு பள்ளிகளில் படித்தவர்கள் 5 பேரே மருத்துவம் படிக்கும் பரிதாப நிலையில் தமிழகம்! இதே நிலைமைதான் இந்தியா முழுவதும் உள்ள ஏழைகளுக்கும் தலித்துகளுக்கும்.

பொருளாதாரத்தில் முன்னேறியவர்களே மருத்துவம் படிப்பதால் பணத்தினை முதலீடு செய்து படிப்பவன் சம்பாதிக்கத்தானே முயற்சிப்பான்?

தியாக மனப்பாங்குள்ள மருத்துவர்களை உருவாக்காததால் மருத்துவத் துறை தனியார் மயமாக்கப்பட்டால் ஏழைகளுக்கு எப்படி இலவச மருத்துவம் கிடைக்கும்? பேரம் பேசி பலரையும் சந்தோஷப்படுத்தி டெண்டர் எடுப்பவன் தரமான மருத்துவம் கொடுப்பானா?

ரேஷன் பொருட்களுக்கான மாநில மானியம் குறைக்கப்பட்டு ரேஷன் பொருட்களையும்  குறைத்துவிட்டனர்.

காய்கறிகளும் உணவு பொருட்களின் விலையும் படு வேகமாக உயர்ந்து வருகிறது.

இஷ்டம் போல் கேஸ் விலையையும் பெட்ரோலையும் உயர்த்துகிறார்கள். ரூபாய் 30 க்கு கொடுக்க முடிந்தாலும் ரூபாய் 70 க்கு விற்று விலைவாசி குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள் அரசியல்வாதிகள்.

பொறியியல் படித்தால் வேலையில்லை, மருத்துவம் படிக்கவே விடமாட்டார்கள். வெளிநாடு சென்றால் வேலையில்லை என துரத்தியடிக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் மக்கள் எப்படி வாழ்வது...?


அரசியல்வாதிகளின் ப்ளூவேல் கேமில் சிக்கிய மக்களே! அவர்களின் டாஸ்க்குகளை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்? மாறி மாறி ஆட்சி செய்து மக்களை ஏமாற்றி ஏய்த்துப் பிழைப்பவர்கள் உங்களை  பைத்தியமாக்கி தற்கொலைக்கு தூண்டும்முன் விழித்துக் கொள்ளுங்கள்.

ஒரு அனிதாவின் தற்கொலையும் சில நூறு விவசாயிகளின் தற்கொலையும் போதாதா...? ஆயிரம், இலட்சம் எனத் தற்கொலைகள் பெறுக வேண்டுமா?

மக்களே!!!  நீங்கள் விழித்திருக்கும்போதே தூங்குவதை நிறுத்தப் போவது எப்போது? நம் வீட்டில் நாம் தானே சமைக்கிறோம் ஆனால் நமக்காக... நம் பிள்ளைகளுக்காக...எதிர்காலத் தலைமுறைகளுக்காக நாம் போராடாமல் யாராவது போராடுவார்கள் என ஏன் காத்திருக்கிறோம்?

உங்களை, உங்களின் உழைப்பை, உழைப்பால் கிடைத்த வயிற்றுப் பசிக்காக மிட்சமிருக்கும் விற்று முதலீட்டை, வயித்தை கட்டி வாயைக் கட்டி சேமித்த பணத்தை என ஒன்றையும் விட்டு வைக்காமல் அனைத்து உரிமைகளையும் பிடுங்கிக் கொண்டு மக்களை அடிமைகளாக்க அடிமை சாசனம் தூக்கிக் கொண்டு முதலாளிகளுக்காக உங்களை விலைபேசும் அரசின் பிரதிநிதிகளுக்கு முன்னே தீரமுடன் போராட   உங்களின் தலைவன் எங்கே?  

தலையில்லா முண்டத்திற்கு மதிப்புண்டா?  தலைவன் இல்லா போராட்டத்திற்கு வெற்றியுண்டா? இலக்கில்லாத ஓட்டமும் தலைவன் இல்லா போரும் ஜெயித்ததாக சரித்திரமில்லை. மக்களே!  உங்களின்  குரலுக்கு உருவம் கொடுக்கும் தலைவன் யார்?

கணங்கும் நெருப்புகளோடு மௌனம் காக்கும் காந்தியக் காளைகளே! நீங்கள் எரிமலையாய் வெடிக்கப் போவது எப்போது ? சொந்த நாட்டிலேயே ஏதிலிகள் உருவாவதை தடுக்கப் போவது எப்போது?

உங்களில் ஒருவனாய் போராடும் தோழனாய் உங்கள் ஜெயசெல்வன்.


மக்கள் பணிக்கு முன்னின்று  அழைக்கிறேன் என்னோடு தோளோடு தோள் கொடுத்து மக்கள் பணியாற்ற வாருங்களென்று ...


உங்கள் ஜெயசெல்வன் 
9677464889

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search