-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

டார்ஜான் படத்தில் நடித்த மனித குரங்கு அமெரிக்காவில் மரணம் (வீடியோ, படங்கள் இணைப்பு)

டார்ஜான் ஆங்கில படங்களில் சீடா என்ற மனித குரங்கு நடித்துள்ளது. இந்த குரங்கு அமெரிக்காவில் மரணம் அடைந்தது. அப்போது அதற்கு வயது 80.
கடந்த 50 ஆண்டுகளாக அமெரிக்காவின் புளோரிடாவில்
உள்ள பாலம் ஹார்பரில் உள்ள விலங்குகள்சரணாலயத்தில் இருந்தது. இது சமீபத்தில் இறந்த தகவல் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. 

இது கடந்த 1930 ஆம் ஆண்டில் மார்ஜான் தி ஏப் மேன் என்ற படத்திலும், 1932-ம் ஆண்டில் டார்ஜான் அன்ட் கிடிஸ் மேட் என்ற படத்தில் நடிகர் ஜானி வேஸ்முல்லர் நடிகை மவுரீன் ஓ சுல்லிவன் ஆகியோருடன் நடித்துள்ளது. சீடா மனித குரங்கு கடந்த 1960 ஆம் ஆண்டு முதல் பால்ம் ஹார்பர் சரணாலயத்தில் இருந்து வந்தது. 

இக்குரங்கு அங்கு வரும் அனைவரையும் கவர்ந்தது. ஓவியங்கள் மற்றும் இசையில் சீடாவுக்கு ஆர்வம் அதிகம். அவற்றை மிகவும் ரசித்து வந்தது. கால் பந்து விளையாட்டை மிகவும் ஆர்வத்துடன் ரசிக்கும் என சரணாலய இயக்குனர் டெப்பி கோப் தெரிவித்துள்ளார். 





DO You Need Web Site?