-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

அசைவத்தை சுவைக்கும் பாண்டா கரடிகள் (வீடியோ, படங்கள் இணைப்பு)

இயற்கை சூழல் மற்றும் வனவிலங்குகளின் நடவடிக்கைகளை ஆராய, அடர்ந்த வனப்பகுதிகளில் கமெரா பொருத்தி பல நாடுகள் கண்காணித்து வருகின்றன. சீனாவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள சிசுவான் மாகாணம் வேங்லாங் வனப்பகுதியில் கமெரா
பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கமெராவில், பாண்டா கரடி அசைவத்தை சுவைக்கும் அரிய காட்சி பதிவாகி உள்ளது. பொதுவாக பாண்டா கரண்டிகள் மிகவும் அமைதியானவை, இலை, பழங்கள், மூங்கில்களை தின்று வாழ்பவை என்று தான் நினைத்திருந்தனர்.



ஆனால், அசைவம் உண்பதை பார்த்து வன ஆர்வலர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். பிங்குவா கவுன்டி வனப் பாதுகாவல் அதிகாரிகள் இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்டமாக பாண்டாக்கள் இயல்பை விட அதிக சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது தெரிய வந்தது. 

இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது, சீன காடுகளில் வனவிலங்குகளின் இறப்பு மர்மமான முறையில் அதிகரித்து வந்தது. இறந்த விலங்குகளின் உடலில் தழும்புகள் இருந்தன. இப்போது பாண்டா கரடி அசைவத்தை சுவைக்கும் காட்சி கமெராவில் பதிவானது ஆச்சரியமாக உள்ளது.



வனவிலங்குகளின் இறப்பு மற்றும் அவற்றின் உடலில் காணப்பட்ட தழும்புகளுக்கும் பாண்டா காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக பாண்டாக்கள் ஒரு நாளைக்கு 14 கிலோ மூங்கிலை உண்ணும்.

இவற்றின் உடல் மற்றும் செரிமான அமைப்பில் சைவம், அசைவம் இரண்டையும் திண்ண ஏதுவானதாக உள்ளதாக முந்தைய ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளன. அந்த ஆய்வு முடிவுகள் இப்போது கமெராவில் பதிவான காட்சிகள் மூலம் நிரூபணமாகி உள்ளது. இதுகுறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுகிறது என்று கூறினர். 

சீனாவின் உயிரியல் பூங்காவில் இருந்த மயில் ஒன்றை பாண்டா கரடி ஒன்று துரத்தி துரத்தி வேட்டையாடி திண்றது சமீபத்தில் கமெராவில் பதிவானது. அதை பார்த்து உயிரியல் பூங்கா நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த காட்சிகள் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

DO You Need Web Site?