ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பால் மணம் மாறாக் குழந்தையின் உயிர் காக்க உதவுங்கள்!

சென்னை: ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த கோபால் என்பவரின் 6 மாத குழந்தை சுகனுக்கு இதயத்தில் கோளாறு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதற்கு ரூ.1,75,000 செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சிறுவனுக்கு உதவும் பொறுப்பை சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள உமன்ஸ் வெல்பேர் டிரஸ்ட் என்ற அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. சிறுவன் சுகன் குறித்து நிறுவனத்தின் மேனேஜிங் டிரஸ்டி பிரமீளா கூறுகையில்,

சுகனின் தந்தை பெயர் கோபால். தாயார் பெயர் ரூபாவதி. ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்தவர்கள். கோபால் டெய்லராக இருக்கிறார். ஏழைக் குடும்பம். சுகனுக்கு ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். உதவி கோரி எங்களை அணுகுமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் எங்களிடம் வந்தனர்.

கடந்த 13 வருடமாக இதுபோன்ற பாதிப்புகளைக் கொண்ட ஏழை, எளியவர்களுக்கு உதவி வருகிறோம். இதுவரை 500 ஓபன் ஹார்ட் அறுவைச் சிகிச்சை, சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சை, காது கேட்காத, வாய் பேச முடியாத சிறார்களுக்கு உதவி செய்துள்ளோம். கல்வி உதவிகளையும் செய்துள்ளோம், செய்து வருகிறோம் என்றார்.

அன்றாட வாழ்க்கையை ஓட்டவே சிரமம்படும் கோபாலால் இவ்வளவு பணம் செலவு செய்ய முடியாது. அதனால் அவர் தன் குழந்தையைக் காப்பாற்ற உதவுமாறு கருணை உள்ளங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். நன்கொடை செய்ய விரும்புவோர் போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை, ஏ/சி சுகன் என்று குறிப்பிட்டு காசோலை அல்லது டிடி எடுத்து அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காசோலை/டிடி/ மணி ஆர்டர் மூலம் ரூ.500 அல்லது அதற்கு மேல் கொடுத்து உதவ விரும்புவோர் உமன்ஸ் வெல்பேர் சின்டிகேட் என்ற பெயரில் அனுப்பி வைக்கவும். உமன்ஸ் வெல்பேர் சின்டிகேட்டிற்கு நன்கொடை அளிக்கும் தொகைக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உமன்ஸ் வெலர்பேர் சின்டிகேட் முகவரி,

உமன்ஸ் வெல்பேர் சின்டிகேட்,
பிளாட் எண் 5, ராஜா மாதங்கி,
பழைய எண் 14, புதிய எண் 27, ஜோசியர் தெரு,
நுங்கம்பாக்கம், சென்னை-34

தொலைபேசி எண்கள்- 28235324/42137401
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search