ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்கும் யூடியூப்

சர்வதேச அளவில் வீடியோ பிரியர்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் யூடியூப் தற்போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. 2005ம் ஆண்டில் பேபால் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களால் துவங்கப்பட்ட இந்த சே‌வையின் மூலம் தமக்குப்
பிடித்தமான வீடியோக்களை பதிவேற்றம் செய்து பார்ப்பதோடு மட்டுமல்லாமல் அதனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பினை யூடியூப் வழங்கி வருகிறது. 

இதன்மூலம் வீடியோ பிரியர்களின் ஏகோபித்த ஆதரவினை யூடியூப் பெற்றுள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. 

இந்நிலையில் மேலும் ஒரு வரப்பிரசாதமாக யூடியூப் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பினையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள், தங்களது வீடியோ படைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்து அதன்மூலம் வருமானம் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டி நிறுவனம் (ஐபிஆர்எஸ்), யூடியூப்புடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

முன்னணி பாடலாசிரியர்களான ஜாவேத் அக்தர், பங்கஜ் உத்தாஸ் உள்ளிட்டோரும், முன்னணி இசை நிறுவனங்களான ஈரோஸ் மியூசிக் பப்ளிசிங் பிரைவேட் லிமிடெட், எம்கே புரொடெக்சன்ஸ் உள்ளிட்ட 2,233 உறப்பினர்கள் இந்த இந்தியன் பெர்பாஃர்மிங் ரைட் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ளனர். 

தற்போதைய அளவில் யூடியூப் இணையதளத்தில் உள்ள விளம்பரங்களின் மூலம் அந்நிறுவனத்திற்கு வருமானம் கிடைத்து வருகிறது. 

ஐபிஆர்எஸ் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசை நிறுவனங்கள் தங்களது வீடியோ ப‌டைப்புகளை யூடியூப் இணையதளத்தில் போஸ்ட் செய்வதன் மூலம் அவர்களுக்கும் கணிசமான தொகை வழங்க யூடியூப் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search