ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

கூடுதல் தகுதி இருந்தால் எளிதில் பணி வாய்ப்பு

தகவல்தொழில்நுட்ப துறைதான் அதிகளவிலான நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் துறை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு பரவலான உண்மை. 

ஆனால், ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகையில், அது கிடைப்பதில்லை என்பதும் ஒரு
முக்கியமான உண்மை. டி.சி.எஸ்., விப்ரோ, இன்போசிஸ் மற்றும் காக்னிசன்ட்(Cognizant) போன்ற முக்கிய ஐ.டி. நிறுவனங்கள், தங்களின் பணிகளுக்கு எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பட்டதாரிகளைக்கூட எடுத்துக்கொள்கின்றன.

இத்துறைக்கு இருக்கும் பணியாளர் பற்றாக்குறையால், 2 வருட எம்.சி.ஏ மற்றும் 3 வருட பி.சி.ஏ. என்ற புதிய படிப்புகளுக்கான கிராக்கியை தூண்டிவிட்டுள்ளது. பொதுவாக, பி.இ மற்றும் பி.டெக் போன்ற படிப்புகளில் சேர முடியாத மாணவர்கள், ஐ.டி. துறையில் நுழைவதற்கு எம்.சி.ஏ. படிப்பைத் தேர்ந்தெடுக்கின்றனர். பி.சி.ஏ மற்றும் எம்.சி.ஏ போன்ற வழக்கமான படிப்புகள் ஒருபுறமிருக்க, தற்போதைய அதிகபட்ச ஆட்கள் தேவையைக் கருத்தில்கொண்டு, பல கல்வி நிறுவனங்கள்(பொதுவாக அவை எந்த பல்கலையுடனும் இணைக்கப்படாதவை) ஐ.டி. துறை சம்பந்தமான பல குறுகியகாலப் படிப்புகளை வழங்குகின்றன.

மேலும், ஒரு ஐ.டி. தொழில் நிபுணர் என்ற நிலையை தவிர்த்து, அலுவலகங்களில் பணிபுரியும் ஒவ்வொருவருக்குமே அடிப்படையான கணித அறிவு அவசியமாகிறது. இன்றைய நிலையில், ஒரு கல்லூரி மாணவன் படிப்பு முடிந்து பணிக்கு செல்லும் முன்பாக அவனுக்கு அடிப்படையான கணினி அறிவு நிச்சயம் தேவையாயிருக்கிறது.

வகைகள்

ஐ.டி. துறைக்குள் 3 விதமான பணிப் பிரிவுகள் உள்ளன.

மென்பொருள் மேம்பாடு(Software development)
தகவல்தொடர்பு அமைப்புகள் மேலாண்மை(Information systems management)
வன்பொருள் நெட்வொர்க்கிங்(Hardware networking)

எனவே, ஒருவர் கணினி பயிற்சியை முடித்தவுடன், மென்பொருள் ப்ரோகிராமிங் பணி(Software programming job), எம்ஐஎஸ் பணி(MIS job) அல்லது நெட்வொர்க்கிங் வகை பணி(Networking kind of job) ஆகிய ஏதேனும் ஒன்றை பெறுகிறார். இத்தகைய பணிகளில் உயர் நிலைகளும், கீழ் நிலைகளும் உண்டு. எனவே, நீங்கள் முடித்த படிப்பின் கால அளவு மற்றும் உங்களின் திறமையைப் பொறுத்து பணிகள் வேறுபடுகின்றன.

படிப்புகள்

பொதுவாக, குறுகியகால படிப்புகள் மற்றும் நீண்டகால படிப்புகள்(தொழில்முறை படிப்புகள்) என்று இரு வகைகள் உள்ளன. குறுகியகால படிப்புகள் 2 முதல் 5 மாதங்கள் கால அளவுகளைக் கொண்டு சான்றிதழ் அல்லது டிப்ளமோ நிலையில் உள்ளன. இந்த குறுகியகால படிப்புகள், ஒருவருக்கு அடிப்படை கணினி அறிவை வழங்குவது முதல் ஒன்று அல்லது பிற கணினி அம்சங்களில் சிறப்பு திறன்களை பயிற்றுவிப்பது வரை உள்ளன.

பல பொறியியல் கல்லூரிகளில், இந்தவகைப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள், மாணவர்களுக்கு அவர்களின் வருங்காலப் பணிக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்கு உதவி புரிகின்றன. கம்ப்யூட்டிங் என்பதைப் பொறுத்தவரை, பல கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் உள்ளன. ஆனால், போதுமான தொழில்நுட்ப வல்லுநர்கள் இல்லை மற்றும் இதுபோன்ற பல சிக்கல்கள் அங்கே உள்ளன. ஆனால், வேலை வாய்ப்பு நிறுவனங்கள் இதுபோன்ற திறன்களையே முக்கியமாக எதிர்பார்க்கின்றன. இதுபோன்ற சிக்கலான நிலையில்தான், மேற்கூறிய குறுகியகால படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் முக்கியப் பணியாற்றுகின்றன.
நீண்டகால படிப்புகள் என்பவை 1 முதல் 3 வருடங்கள் வரையான காலகட்டத்தினைக் கொண்டது. வகுப்புகள், ஒரு நாளைக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் நடைபெறும் மற்றும் வாரம் 5 நாட்கள். சில படிப்புகள் ஒரு நாளைக்கு 2 மணிநேரங்கள் மற்றும் வாரத்திற்கு 3 நாட்கள் நடைபெறும். இந்தப் படிப்புகள் ஒரு மாணவரின் திறன் மற்றும் அவர் ஒதுக்கும் நேரம் ஆகியவற்றைப் பொறுத்து நடைபெறும்.

இந்தவகைப் படிப்புகளில்,
எலக்ட்ரானிக் புத்தகங்கள், மற்ற மாணவர்களுடன் இணைந்து பணியாற்றுதல், அமைப்புகளுக்கான அளவீடுகள், பயிற்சி திட்டங்கள், பதிவுசெய்யப்பட்ட விரிவுரைகள் மற்றும் நேரடி விரிவுரைகள் போன்ற அம்சங்கள் இருக்கும்.
மாணவர்களுக்கு டேட்டாகார்டுடன், லேப்-டாப் வழங்குவதால், மேற்கூறிய வசதிகளை அவர் எப்போதும், எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். மேலும், பாடங்களை லேப்டாப்பிலேயே இறக்கம் செய்து வைத்துக்கொள்ளலாம்.
மைக்ரோசாப்ட்(Microsoft) சான்றிதழ் என்பது, ஐ.டி. தொழில்துறை நிபுணர்களுக்கான ஒரு சிறந்த சான்றாகும். மேலும் இது உலகளவில் செல்லத்தக்கதாகும். இது, அதிகளவிலான மைக்ரோசாப்ட் தொழில்நுட்பங்களுக்கும், அனைத்துவித திறன்களுக்கும் கிடைக்கிறது. இந்த சான்றிதழ், ஒருவர் சிக்கல் வாய்ந்த ஐ.டி. தொழில்நுட்பங்களை கையாளும் விதத்தில் அவருக்கு பயிற்சியளிக்கிறது.

இவைத்தவிர, வேறுபல முக்கிய சான்றளிப்புகளும் உள்ளன. அவை, Microsoft certified Architect(MCA), Microsoft certified master(MCM), Microsoft certified IT professional (MCITP), Microsoft certified professional developer(MCPD), Microsoft certified technology specialist(MCTS) மற்றும் Microsoft technology associate(MTA) போன்றவையாகும்.
தனித்தன்மையான வாய்ப்புகள்

வணிகம் தொடர்பான(B.Com. போன்ற) படிப்புகளை முடித்த மாணவர்களுக்கு, NIIT, தொழில்நுட்ப-வணிக பயிற்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலில், இந்த திட்டம் மும்பையில் நிறுவப்பட்டுள்ளது. ஒருவர், ERP, Talley அல்லது மேலாண்மை தகவல்தொடர்பு அமைப்புகள் போன்ற தொழில்களுக்கு செல்லும்போது, அவருக்கு மேலாண்மை அக்கவுண்டிங் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பாடத்திட்டத்தில் இந்த அம்சம் இருக்காது. இந்த சிக்கல்களை தீர்ப்பதற்குத்தான் மேற்கூறிய படிப்புகள். இதன்மூலம் அவர் பலவித வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெற முடியும்.

ஆப்டெக்(APTECH), தனது 3 வருட பிஎஸ்சி படிப்பிற்காக, மிடில்செக்ஸ் பல்கலையுடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தப் படிப்பில் ஆப்டெக்கில் 2 வருடம் படித்து, 3வது வருடத்திற்கு அதன் பிரிட்டன், துபாய் அல்லது மொரீஷியஸ் வளாகத்திற்கு சென்று படிக்கலாம். இந்தப் படிப்பு பல ஆப்ரிக்க நாடுகளுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. விரைவில் இந்தியாவிலும் தொடங்கப்படவுள்ளது.

இதர அம்சங்கள்

மேற்கூறிய வழக்கமான விஷயங்களுடன், மல்டிமீடியா, ஏவியேஷன் மற்றும் விருந்தோம்பல் மேலாண்மை போன்ற பல பிரிவுகளும் உள்ளன. இதற்காக, தமிழகத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையுடன் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஆப்டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதன் சார்பில் ஆங்கில பயிற்சி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வேலை வாய்ப்புகள்

நீங்கள் ஒரு பொறியாளராக இருந்தாலோ அல்லது பொறியாளராக பணியாற்றப் போகிறவராக இருந்தாலோ, சில கூடுதல் டிப்ளமோ படிப்புகள் தேவைப்படுகின்றன. இதன்மூலம் 2 முதல் 2.5 வரை ஆண்டு வருமானம் பெறலாம் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஒருவர் வணிகப் படிப்பை முடித்த மாணவராக இருந்தால், நிதி மற்றும் அக்கவுண்டிங் துறையில் டிப்ளமோ முடித்திருந்தால் அவருக்கு வேலை வாய்ப்பு எளிதாக இருக்கும் என்றும் வேலைவாய்ப்பு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.
Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search