ஆன்லைனில் சம்பாதிக்க

வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் 25000 முதல் 100000 வரை சம்பாதிக்க கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலமே பயிற்சி பெற உடனே தொடர்பு கொள்ளவும்.
Cell: 0- 7373630788 -
தமிழ் உலகம்


தமிழ் தேடல்

www.TamilnaduClassifieds.tk

செவ்வாய்க் கோள் பயணத்துக்கு 520 நாள் ஒத்திகை முடிந்தது

செவ்வாய் கிரக பயணத்துக்கான 520 நாள் விமான பயண ஒத்திகையை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக விஞ்ஞானிகளை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஏற்பாடுகளை
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் செய்துவருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவில் செவ்வாய் கிரக பயணத்துக்கான ஒத்திகை நடத்தப்பட்டது.அதாவது, இதற்கென 180 சதுர மீற்றர் பரப்பளவு கொண்ட பேருந்து வடிவில் ஜன்னல்கள் எதுவுமின்றி ஒரு சிறப்பு விண்வெளி ஆய்வுகூட வாகனம் வடிவமைக்கப்பட்டது. இதில் 3 ரஷ்யர்கள், பிரான்ஸ், இத்தாலி மற்றும் சீனாவைச் சேர்ந்த தலா ஒருவர் என 6 பேர் இந்த வாகனத்துக்குள் இருந்தனர்.

மொஸ்கோவின் ‘இன்ஸ்டிடியூட் போர் மெடிகல் அன்ட் பயோலொஜிகல் புரொப்ளம்’, ரஷ்யாவின்  முதன்மை விண்வெளி மருத்துவ மையம் ஆகியவற்றில் இதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

சூரிய ஒளி, சுத்தமான காற்று இல்லாமல் இருட்டுக்குள்ளே இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படுவது போன்ற உணவு வழங்கப்பட்டது.

தங்களது குடும்பத்தினரை இணையத்தளம் மூலம் தொடர்பு கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு 520 நாட்களை (சுமார் ஒன்றரை ஆண்டுகள்) கழித்த அவர்கள் வெற்றிகரமாக வாகனத்திலிருந்து கடந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியேறினர்.

இதன்மூலம் செவ்வாய் கிரகத்துக்கு சென்று ஆராய்ச்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விஞ்ஞானிகளின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், எனினும், அவர்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுவதாகவும் மனநல மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

செவ்வாய்க் கிரகத்திற்கு சென்று திரும்புவதற்கு ஒன்றரை ஆண்டுகள் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts Plugin for WordPress, Blogger...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search