-->
உலகின் முக்கியமான நடப்பு செய்திகள், முக்கிய குறிப்புகள், தேவையான தகவல்கள், மருத்துவ குறிப்புகள், வீடியோக்கள், அரசியல், விளையாட்டு என அனைத்தையும் அள்ளித்தந்து உலகத் தமிழர்களின் மனங்களை மகிழ்விக்கும் உன்னத உலகம் எங்கள் தமிழ் உலகம் இணையத்தளம்

தமிழ் தேடல்

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tamil Ulagam Search

மளிகை சாமான் வாங்கி வரும் "நாய்'

விழுப்புரம்:விழுப்புரத்தில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் அதிசய நாயை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந் தவர் பாபு,42; தையல் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா,37. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடந்த ஓராண்டாக
தங்களது செல்லப்பிராணியாக லேபர் வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இதற்கு "ஹனி' என பெயர் வைத்துள் ளனர். இந்த நாய் மளிகை கடைக்கு சென்று வீட்டின் உரிமையாளர் கொடுத்தனுப்பும் லிஸ்ட் படி கூடையில் பொருட்களை வாங்கி வருகிறது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் மற்றும் சாப்பாடு, மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகளை செய்கிறது. இந்த அதிசய நாயை பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

DO You Need Web Site?