
பிறப்பின் போது குழந்தையின் நிறை 2.89 கிலோ கிராம்கள் எனவும் குழந்தை மற்றும் அதன் தாயார் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரோமானியரான இச்சிறுமி ஸ்பையின் நாட்டில் அண்மையில் குடியேறியவர் என்றும் குடியேறியபோதே கருத்தரித்து இருந்ததாகவும் ஸ்பானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவைச் சேர்ந்த திரீஸா மிடில்டொன் என்ற 12 வயச் சிறுமி 2006 ஆம் ஆண்டு குழந்தையொன்றினை பெற்றிருந்தார். இந்த வருடம் பெப்ரவரி மாதம் 9 வயதான பாடசாலை சிறுமியொருவரும் குழந்தையொன்றை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.