காடுகள் அழிக்கப்படுவதால் அரிய விலங்கான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ளது போர்னியா தீவு.
மனித தொந்தரவு இல்லாத அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு இது. இந்த தீவில் வானுயர்ந்த மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை மரங்கள். அதனால் பனம்பழத்தை விரும்பி திண்ணும் உராங் குட்டான் குரங்குகள் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
மனித தொந்தரவு இல்லாத அடர்ந்த காடுகள் நிறைந்த தீவு இது. இந்த தீவில் வானுயர்ந்த மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பனை மரங்கள். அதனால் பனம்பழத்தை விரும்பி திண்ணும் உராங் குட்டான் குரங்குகள் எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
இந்நிலையில் உலகளவில் சமையல் எண்ணெய் தேவை அதிகரித்து வருவதால், போர்னியா தீவில் உள்ள பனை மரங்களை குறி வைத்துவிட்டனர். பாமாயில் உற்பத்திக்காக தீவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டி எடுத்து செல்கின்றனர்.
மேலும், தீவில் வசிப்பவர்களே விபரீதம் தெரியாமல் பனைமரங்களை வெட்டி வருகின்றனர். அத்துடன் இந்த குரங்குகளையும் அதிகளவில் வேட்டையாடுகின்றனர். அதனால் அரிய இனமான உராங் குட்டான் குரங்குகள் அழிந்து வருவதாக வன ஆர்வலர்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.
உலகளவில் சுமார் 20 சதவீத உராங் குட்டான் குரங்குகள் போர்னியா தீவில்தான் இருந்தன. இப்போது அந்த நிலை இல்லை. கணிசமாக குறைந்துவிட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதே நிலை நீடித்தால் 20 ஆண்டுகளில் தீவில் உராங் குட்டான்கன் முற்றிலும் அழிந்துவிடும் என்று எச்சரித்துள்ளனர்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?