இந்தப் படகைப் பார்த்தவுடன் அது ஒரு மிதக்கும் லிமோசின் கார் என்பது போல்தான் தோன்றும். அது உண்மை தான். அத்துடன் இக்கப்பலில் லிமோசின் வகைக் கார் ஒன்றுங்கூடக் காணப்படும்.
இதற்கு நீங்கள் 85மில்லியன் (132டொலர்) கொடுத்தால் போதும். அது உங்கள் கையில். இதன் நீளம் 100 மீற்றர்களாக உள்ளது. இதில் ஒரு வாகனம் நிறுத்துமிடம் ஒன்றும் உள்ளது.
அதுபோலவே சிறந்த தளபாடங்களும் ஒரு நீச்சல் தடாகமும் கோல்ப் (golf) விளையாட்டிற்கான பச்சைப் புல்வெளி ஒன்றும் காணப்படுகின்றது.

இத்துடன் கண்ணாடியாலான உலங்குவானூர்தி இறங்குதள வடிவம் ஒன்று, ஒரு திரையரங்கு, 10 பேருக்கான விருந்தாளி உடைகள், ஓர் இரவு அரங்குப் பகுதி என்பனவற்றையும் இங்கு காணலாம்.
இவற்றை எல்லாம் விட பாரிய காற்றுச்சுழலி ஒன்றும் இந்தப் படகில் காணப்படுகின்றது. இதுதான் இப்படகிற்கு மின் வழங்கும் தொகுதியாகும்.
சுற்றுலாப் பயணப்படகில் இது ஒரு சிறப்பான வெளியீடு என இதனைத் தயாரித்த நிறுவனத்தினர் மட்டுமல்லாது பார்வையாளர்களும் தெரிவிக்கின்றனர்.




வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?