திருமணம் ஆகி பல ஆண்டுகளாகியும் குழந்தைபேறு கிடைக்காத தம்பதியரின் கவலையை தீர்க்கும் பொருட்டு மிராக்கிள் அட்வான்ஸ்டு ரீபுரடக்டிவ் சென்டர் சைட்டோபிளாமிக் டிரான்ஸ்பர் மருத்துவ முறை அறிமுகம் செய்து வெற்றி கண்டுள்ளது.பெண்களின் வயது
கூட கூட கருமுட்டைகளின் தரம் குறைந்து கொண்டே வரும். 40 வயதில் ஒரு பெண் உற்பத்தி செய்யும் முட்டை 25 வயதில் உற்பத்தியாகும் முட்டையை போல தரமாக இருப்பதில்லை. இதனால் வயது முதிர்ந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள். குழந்தை பேறு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
கூட கூட கருமுட்டைகளின் தரம் குறைந்து கொண்டே வரும். 40 வயதில் ஒரு பெண் உற்பத்தி செய்யும் முட்டை 25 வயதில் உற்பத்தியாகும் முட்டையை போல தரமாக இருப்பதில்லை. இதனால் வயது முதிர்ந்த காலத்தில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள். குழந்தை பேறு கிடைக்காமல் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் தானமாக பெறப்படும் கருமுட்டைகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு செயற்கை கருதரிக்க வரும் பெண்களுக்கு ஆலோசனை வழங்கப்படும். ஆனால் தானமாக வழங்கப்படும் முட்டைகளை பெரும்பாலானோர் ஏற்றுக் கொள்வதில்லை.
தரம் குறைந்த முட்டைகள் கரு தரிப்பது சிரமம். அப்படியே கரு தரித்தாலும் அதன் தரமும் குறைவாகவே இருக்கும். இதனால் தான் வயதான பெண்களுக்கு கர்ப்பம் உருவாவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. சில பெண்களுக்கு இளம் வயதிலும் தரம் குறைவான முட்டை உற்பத்தியாகும். இதனால் அவர்களால் கர்ப்பம் தரிக்க முடியவில்லை. இந்த சூழ்நிலையில் சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்பர் கருதரிக்க உதவி செய்கிறது.
பலவிதமான தூண்டுதல் நடைமுறைகளை கடைபிடித்தாலும் சிலர் மிகவும் தரம் குறைந்த முட்டைகளையே உற்பத்தி செய்வார்கள். நீண்ட நடைமுறை அல்லது ரீகாம்பினன்ட எப்எஸ்எச் முறையிலும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இத்தகைய சூழ்நிலையில் ஏ.ஆர்.டி. சிகிச்சை முறையில் ஒரு பெண்ணின் சொந்த முட்டைகளை பயன்படுத்த ஒரே வழி சைட்டோ பிளாஸ்மிக் டிரான்ஸ்பர் முறை தான்.
இந்த பெண்கள் உற்பத்தி செய்யும் அனைத்து முட்டைகளும் தரம் குறைந்ததாகவே இருக்கும் பட்சத்தில் அவர்களது சகோதரியின் நல்ல தரமான முட்டையிலிருந்து 5 முதல் 8சதவீதம் வரையிலான சைட்டோபிளாசத்தை எடுத்து மிக துல்லியமான அளவை தரம் குறைந்த முட்டைகளில் செலுத்தி அதன்தரத்தை உயர்த்துவார்கள். இந்த தொழில் நுட்பத்தில் தரம் குறைந்த முட்டைகளின் கரு தரிக்கும் வாய்ப்பு அதிகமாகும். இப்படி பிறக்கும் குழந்தை பெற்றோர்களின் மரபணுக்களையே கொண்டிருக்கும். இந்த முறையில் யாரோ ஒருவரது முட்டையை நாம் பயன்படுத்த வேண்டியது இல்லை.
இந்த இரண்டு முறைகளிலும் தரமான முட்டை கிடைக்காவிட்டால் உரிய ஆலோசனை மற்றும் சம்மதத்துடன் வேறு ஒருவர் தானமாக வழங்கிய நல்ல தரமான முட்டைகளை பயன்படுத்தப் படும்.
இந்த தொழில்நுட்பத்தை கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுத்தி வருகிறோம், முதன் முறையாக சைட்டோபிளாஸ்மிக் டிரான்ஸ்பர் மூலம் பிறந்த குழந்தைக்கு இப்போது 8 வயதாகிறது.
இந்த புதிய தொழில்நுணுக்கத்தைப் பயன்படுத்தும் ஒரே மையம் மிராக்கிள் தான். மற்ற இரண்டு மையங்கள் அமெரிக்காவில் உள்ளன. இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் இதுவரை 15 குழந்தைகள் பிறந்து ஆரோக்கியமாக உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?






