-->

Pages

உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் கட்ட சீனா முடிவு (படங்கள் இணை ப்பு)

உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையத்தை கட்ட சீனா முடிவு செய்துள்ளது. சீனாவின் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, உலகின் மிக உயரமான இடத்தில் விமான நிலையம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது.

திபெத்தில் சுமார் 4 ஆயிரத்து 436 மீட்டர் உயரம் கொண்ட நாக்வூ பகுதியில் இந்த விமானநிலையம் கட்டப்பட உள்ளது. திபெத்தில் உள்ள குவாம்டோ பகுதியில் உள்ள பம்டா விமான நிலையம் உலகின் உயரமான விமான நிலையமாக கருதப்படுகிறது.

தற்போது இந்த விமான நிலையம் சுமார் 660 ஏக்கரில் கட்டப்படவுள்ளது. சுமார் 285 மில்லியன் டொலர் செலவில் கட்டப்படவுள்ள விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் மூன்று ஆண்டுகளில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.