பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில்,மாற்று எரிபொருளாக,பயோ எரிபொருளை
பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான முயற்சியில்,வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணெய் மற்றும் பாபாசூ எண்ணெய்( தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்பட்டது) ஆகியவற்றின் கலவையில் உருவான புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது.
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து,நெதர்லாந்தில்உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு,போயிங் 747400 ரக ஜெட் விமானம், இயக்கப்பட்டது. விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன. அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது.
இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை. பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களுமே, பயணம் செய்தனர்.தேங்காய் எண்ணெய் மூலம் விமானத்தை இயக்கிய ரிச்சர்டு பிரான்சன் முயற்சியை பலர் பாராட்டி உள்ளனர்.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?