ஸ்பெயின் நாட்டில் தற்போது வசித்துவரும் ரோமானியா நாட்டைச் சேர்ந்த எலீனா என்ற 10 வயது சிறுமி குழந்தையொன்றுக்கு தாயானாள். இக் குழந்தையின் தந்தையின் வயது வெறும் 13 வருடங்களே என அச்சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஸ்பானிய நகரான ஜெரெஸ் டி லா புரென்டெரா நகரில் உள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இவர் குழந்தையைப் பெற்றுள்ளார்.பிறப்பின் போது குழந்தையின் நிறை 2.89 கிலோ கிராம்கள் எனவும் குழந்தை மற்றும் அதன் தாயார் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ரோமானியரான இச்சிறுமி ஸ்பையின் நாட்டில் அண்மையில் குடியேறியவர் என்றும் குடியேறியபோதே கருத்தரித்து இருந்ததாகவும் ஸ்பானிய பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே பிரித்தானியாவைச் சேர்ந்த திரீஸா மிடில்டொன் என்ற 12 வயச் சிறுமி 2006 ஆம் ஆண்டு குழந்தையொன்றினை பெற்றிருந்தார். இந்த வருடம் பெப்ரவரி மாதம் 9 வயதான பாடசாலை சிறுமியொருவரும் குழந்தையொன்றை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
வீட்டிலிருந்தே ஆன்லைனில் வேலை செய்து வருமானம் பெற அறிய வாய்ப்பு
விளம்பரம் பார்த்தால் பணம் கிடைக்குமா? எப்படி?
உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் செய்ய வேண்யவைகள்!!!
உடல் எடையை வேகமாக அதிகரிப்பதற்கான 9 சிறந்த வழிகள்!
தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?
சுவையான சன்னா மசாலா கிரேவி
அலையலையாய் அழகு கூந்தல் வேணுமா?