-->

Pages

ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரிப்பு

இந்தியாவில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் இரு மடங்காக உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.


ஒவ்வொரு மாதமும் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

அதன்படி கடந்த ஆண்டில் இந்தியாவில் மட்டும் ஃபேஸ்புக் பயன்பாடு 132 சதவீதம் அதிகரித்துள்ளது. இது பிரேசிலில் 268 சதவீதமாக உள்ளது.

சீனா போன்ற கம்யூனிஸ நாடுகளில் சமூக இணையதளங்களைப் பயன்படுத்துவதற்கு அதிகக் கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஃபேஸ்புக்கை குறைவாக பயன்படுத்துகிறார்கள்.

ஃபேஸ்புக்கின் பங்குகளை அமெரிக்க பங்கு வர்த்தகத்தில் வெளிவிட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.