-->

Pages

காமெடியான பெற்றோர் யார்? - சிரிப்புடன் சிந்தனை

நம் தமிழர்களின் குழந்தை வளர்ப்பு முறை பற்றி பேசும் போது நாம் நம்முடன் அயல்நாட்டுக்காரர்களை ஒப்பிடாமல் பேசுவதே இல்லை. நம் பிள்ளை மரம் அல்லது அதை போன்ற ஒரு உயரமான இடத்தில் ஏறி, அங்கிருந்து இறங்கத் தெரியாமல் திண்டாடும் போது நம் பெற்ற மனம்
அவர்களை இறக்கி விட யோசிப்பதே இல்லை. அனிச்சை செயலாகவே அது நிகழ்ந்து விடும். வெளி நாட்டுகாரனாக இருந்தால், அவன் அந்த குழந்தையை இறக்கி விட மாட்டன். குழந்தை எவ்வாறு ஏறியதோ அதை போல இறங்கட்டும் என்று விட்டு விடுவார்கள் என்று சொல்லுவார்கள். இப்பொழுது இங்கே சிலர் சிறுது மாறி இருக்கிறார்கள். அதாவது கீழே இறங்க முடிகிறதா என்று பார்க்கிறார்கள். இறங்குவதற்கு வழிகாட்டுகிறார்கள். இறங்கவே முடியாத போது இறக்கி விடுகிறார்கள். இது நிச்சயமாக ஒரு நல்ல மாற்றம்.