-->

Pages

கடாபியின் மகன் சயிப் கைது (வீடியோ இணைப்பு)

லிபிய ஜனாதிபதி கடாபியின் மகன் சயிப் அப் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த தகவலை அந்நாட்டு இடைக்கால அரசின் அதிகாரியொருவர் உறுதிப்படுத்தியுள்ளார். லிபியாவின் தெற்கு பகுதியில்
வைத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடாபியின் மகன்களில் அதிக அதிகாரம் கொண்ட ஒருவராகக் கருதப்பட்ட சயிப் லிபியாவை விட்டுத் தப்பிச் சென்றிருந்ததாக ஆரம்பத்தில் நம்பப்பட்டது. 

இவர் சர்வதேச நீதிமன்றத்தில் சரணடையலாம் எனவும் ஆரம்பத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.