குண்டானவர்கள் மற்றும் தொப்பையானவர்களுக்கு கசப்பான ஒரு தகவலை இலண்டன் மருத்துவ ஆராய்ச்சி ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சுகாதார மேம்பாடு தொடர்பாக அந்த ஆணைக்குழுவில் மேற்கொண்ட ஆய்வில், ‘வாழ்க்கையில் ஒரு முறை குண்டாகி விட்டாலோ அல்லது உடலில் கொழுப்பு சேர்ந்து தொப்பையாகி விட்டாலோ மீண்டும் பழைய நிலைக்கு
வரவே முடியாது’ என தெரியவந்தது.
வரவே முடியாது’ என தெரியவந்தது.
இதற்காக, 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் பிறந்த சுமார் 25 ஆயிரம் பேரிடம் 55 ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த இரண்டு குழுவினரும் 1980ம் ஆண்டு முதல் குண்டாகவோ அல்லது கொழுப்பு சேர்ந்து தொப்பையுடனோ மாறத் தொடங்கினார். அதன் பிறகு, உணவு கட்டுப்பாடு, யோகா என பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் உடல் எடையை மட்டுமே அவர்களால் குறைக்க முடிந்தது. உடலில் சேர்ந்த கொழுப்பை அவர்களால் குறைக்கவே முடியவில்லை என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

