-->

Pages

பூமியை நோக்கி சீறி பாய்ந்து வரும் ராக்கெட்டின் உடைந்த பாகங்கள்

பூமியில் இருந்து விண்வெளிக்கு உலக நாடுகள் செயற்கை கோள்களை அனுப்புகின்றன. ராக்கெட் மூலம் செலுத்தப்படும் அவை விண்வெளிக்கு செல்லும் போதும், சென்ற பிறகும் பழுதடைகின்றன. இதனால் உடைந்து நொறுங்கும் ராக்கெட்டின் உதிரிபாகங்களும், செயற்கை கோள்களின் பாகங்களும் காற்று இல்லாததால் விண்வெளியில் பூமியை சுற்றி மிதந்தபடி இருக்கின்றன
அவை மணிக்கு 28,164 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நெருங்கி வருகின்றன. அவை பூமியை நெருங்கி நிலை நிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. அவை தவிர சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களும் ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ராக்கெட்டின் உடைந்த உதிரி பாகங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்ற விரைவில் அகற்ற வேண்டிய கட்டாய நிலை உருவாகி உள்ளது. அதற்கான எச்சரிக்கையை அமெரிக்காவில் உள்ள தேசிய ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. 

பூமியை விண்வெளியில் தற்போது சுமார் 1000 செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டு செயல்படுவதாகவும், சுமார் 16,094 உடைந்த பாகங்கள் பூமியை நெருங்கி வருவதாகவும் அந்த ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. எனவே ராக்கெட் உடைந்த பாகங்களை அகற்றும் புதிய திட்டத்தை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.