வடகொரியா மீதான தென்கொரியா மற்றும் ஜப்பானின் சந்தேகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஜப்பானின் புதிய பிரதமராக யோஷிஹிக்கோ நோடோ பதவியேற்றவுடன், இருதரப்பு உறவுகளைச் சீர்படுத்த முயலும்படி வடகொரியா கோரிக்கை விடுத்தது. அதை ஜப்பான் கண்டுகொள்ளவில்லை. வடகொரியாவின் அணுஆயுத உற்பத்தி மீது அமெரிக்கா, ஜப்பானின் சந்தேகம் இன்னும் தீரவில்லை. கடந்த 22ம்தேதி, ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து, எச் - 2ஏ என்ற உளவு செயற்கைக் கோள் ஏவப்பட்டது. மொத்தம், 470 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆக., 28ம் தேதியே விண்ணில் ஏவப்படுவதாக இருந்தது. சூறாவளி தாக்குதல் இருந்ததால், மூன்று முறை ஏவும் திட்டம் தள்ளிவைக்கப்பட்டு இறுதியில் கடந்த வாரம் ஏவப்பட்டுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் இருக்கும் இடங்களை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும். |