-->

Pages

சிலிக்கு அருகில் 21 பயணிகளுடன் விமானம் மாயம்

சிலியின் விமானபடைக்கு சொந்தமான விமானம் ஒன்று வடக்கு பசுபிக் கடலின் பெர்னாண்டெஸ் தீவுகளுக்கு அருகில் 21 பயணிகளுடன் நேற்று  காணாமல் போயுள்ளது.


இதனை தேடும் பணிகள் தற்சமயம் முடக்கிவிடப்பட்டுள்ளன. CASA விமானப்படைக்கு சொந்தமான குறித்த விமானம், மோசமான வானிலையால்  விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. இரு தடவை அண்மித்த தீவுப்பகுதி ஒன்றில் தரை இறங்க முயற்சித்த போதும் வேகமான காற்று மற்றும் வானிலையால் அம்முயற்சி தோல்வி அடைந்ததுடன், விமானம் காணாமல் போனது.

ஜோன் பெர்னாண்டஸ், லியோபொல்டோ, கொன்சலெஸ் கடற்பகுதிகளில் தற்சமயம் படகுகள் மூலம் மீட்பு நடவடிக்கைகள் முடக்கிவிடப்பட்டுள்ளன. இதுவரை உயிருடன் அல்லது சடலமாக எவரும் மீட்கப்படவில்லை.

சிலியின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான Good Morning Everyone ற்கு அறிவிப்பாளராக கடமை ஆற்றும் 44 வயதான நபரும், குறித்த விமானத்தில் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.