-->

Pages

கடலுக்கு அடியில் கனவுச்சுற்றுலா (படங்கள் இணைப்பு)

 விண்வெளிக்குச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லவதாகக் கூறியுள்ள றிச்சாட் பிறன்சன் தனது கவனத்தை மனிதன் கண்டறியாத உலகின் கடலடித் தளத்தின் மீதும் திருப்பியுள்ளார்.




இவர், இயக்குநர் ஜேம்ஸ் கமரூனுடனும் சர்வதேச வலையமைப்பின் முன்னோடியான எரிக் ஈஸ்மிட் உடனும் இணைந்து மனிதன் சென்றிராத கடல் ஆழத்திற்குச் செல்லக் கூடிய கடற்கலத்தினை உருவாக்குகின்றார்.







ரைட்டன் உற்பத்தியாளர்கள் இவ்வாறானதொரு கலத்தை உருவாக்கியதுடன் மூழ்கிய ரைட்டானிக் கப்பலையும் பீஸ்மார்க் கப்பலையும் அண்மையில் சென்று பார்ப்பதற்கான பயணத்தினையும் ஏற்பாடு செய்யவுள்ளனர்.

36,000 அடிக்குக் கீழே செல்லும் நோக்கில் ‘வேஜின் ஓசியானிக்’ எனும் தனி இருக்கை கொண்ட நீர்மூழ்கியை பிரான்சன் கடந்த ஏப்ரலில் செலுத்தியிருந்தார்.



இந்தப் புது நீர்மூழ்கியின் பிரதான பாகத்தில் 4 அங்குலத் தடிப்பில் சிறப்புக் கண்ணாடி அமைக்கப்படும் என ரைட்டானை உருவாக்குபவர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, கூகிளின் ஸ்கிமிச்சும் 11கி.மீ. ஆழத்திற்குச் செல்வதற்காக மூவரைக் கடலடிக்குச் செல்வதற்காகத் தயாராகின்றார் என்பது தகவல்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.