-->

Pages

நகர மேயர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்?! (வீடியோ)


லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ்.



நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர். ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே



வில்னியஸில் இப்போது கார்களை பார்க்கிங் பண்ணவே பயப்படுகிறார்களாம்!. உண்மையில் அந்நகரம் இப்படி ஒரு மேஜர் கிடைத்ததற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

அன்பு நண்பர்களே: தங்களுடைய மேலான மதிப்பு மிக்க கமெண்ட்டுகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், வியாபாரம், விளம்பரம் மற்றும் மற்றவர்களை துன்புறச் செய்யும் அல்லது அசிங்கமான கமெண்டுகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.